முஸ்லீம் அரசியல்வாதிகள் கடைசியில் எப்படி மாறுவார்கள் என்பது மகிந்தைக்கு தெரியும்

134

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னணி பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அலரி மாளிகையில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி உட்பட சிலர் கலந்து கொண்டதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

14026_10152384026851467_8919753075655457165_n

 

SHARE