ஹன்சிகா தலயுடன் ஜோடி

111

கோ
லிவுட்டில் அடியெடுத்து வைக்கும் எல்லா நடிகைகளுக்கும் அஜித், விஜய் உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன்தான் தற்போது நடிக்க வருகின்றனர். தான் நடிக்க வந்தவுடனே விஜய் உடன் ஜோடியாக நடித்த ஹன்சிகா எப்படியாவது அஜித்துடன் நடித்தே தீர வேண்டுமென பலவிதமாக முயற்சித்து வந்தார். சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கவுள்ள படத்தில் நடித்தே தீரவேண்டுமென்பதற்காக அடுத்தடுத்து தொடர்ந்து செய்து இயக்குநர் சிவாவிடம் அணுகியுள்ளார். அந்தப் படத்திற்காக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சமந்தா என பல ஹீரோயின்களை யோசித்த சிவா கடைசியில் ஹன்சிகா தான் அந்தப்படத்தின் ஹீரோயின் வேடத்திற்கு சரியாக இருப்பார் என்று முடிவு செய்து ஹன்சிகாவிற்கு அந்த வாய்ப்பை தந்துவிட்டாராம். அஜித்துடன் நடிக்க தான் எடுத்த விடாத முயற்சிகள் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியிள் துள்ளிக் குதிக்கிறாராம் ஹன்சிகா.
SHARE