ஹரி கூட்டணியில் மீண்டும் சூர்யா

76

ரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் நடித்துள்ள பூஜைப்படம் தீபாவளிக்கு ரிலிஸாகவுள்ள நிலையில் இப்படத்தை தொடர்ந்து தான் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து அடுத்தப் படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் இயக்குநர் ஹரி. இதற்காக சூர்யாவிடம் இரண்டுவிதமான ஆக்‌ஷன் கதைகளை சொல்லியிருப்பதாகவும் அந்த இரண்டில் சூர்யாவிற்கு எந்த கதை பிடிக்கிறதோ அந்தக் கதையை இயக்கவுள்ளதாக கூறியுள்ளதோடு மேலும் சிலர் தானும் சூர்யாவும் மீண்டும் இணைவதால் இது சிங்கம்-3 என சிலர் கேட்கிறார்கள், ஆனால் இது வேறு மாதிரியான கதை என்றும் அதனால் சிங்கம் படத்தின் தொடர்ச்சியா என்பது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது, அடுத்தபடியாக ஸ்கிர்ப்டுக்கான பணிகளில் ஈடுபடும் போதுதான் கதையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அது சிங்கம்-3 அல்லது வேறு படமா என்பது தெரியும் என்று சொல்லியிருக்கிறார்.
SHARE