ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக பாப்பரசரை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த வேண்டாம்-கார்தினால் ரஞ்சித்

116

தயவு செய்து பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்ட இரண்டு புதிய தபால் தலைகள் வெளியிடும் நிகழ்வு நேற்று நீர்கொழும்பு புனித மேரி தேவாலயத்தில் நடைபெற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தபால் தொலைதொடர்பு அமைச்சர் ஜீவன் குமாரதுங்க உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

நீதியான முறையில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துமாறு அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளிடம் கோருகின்றேன்.

சுயாதீனமான தேர்தல்களுக்கு எவரும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

மக்கள் அமைதியான முறையில் வாக்களிப்பதற்கு உரிய பின்னணியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் வன்முறைகள் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தயவு செய்து உங்களது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள பாப்பரசரை பயன்படுத்த கூடாது என கார்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

SRI_LANKA_F_0229_-_Vescove_su_proteste_Onu

 

SHARE