ஐ.நாவுக்கு வரும் தமிழர்கள் சிலர் சிறிலங்காவின் உளவாளிகள் – கிருபாகரன் குற்றச்சாட்டு

 

 

 

 

 

 

 

( கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை பேரவை கூட்டங்களில் பங்கேற்று வரும் பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச்செயலாளர் ச.வி. கிருபாகரன் நடந்து முடிந்த ஐநா மனித உரிமை பேரவையின் 37வது கூட்டத்தொடர் தொடர்பாக வழங்கிய விசேட செவ்வி )

கேள்வி ஐநா மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக நடந்த விவாதங்களின் முக்கிய விடயங்களாக எதனை கருதுகிறீர்கள்?

பதில் 37ஆவது கூட்டத்தொடரின் விவாதங்கள் என்னும் பொழுது, அதை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. மற்றையது பக்க கூட்டங்களின் நடைபெற்றது.
இதில் பிரதான மண்டபத்தில் வெளியான ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் சிறிலங்கா பற்றிய அறிக்கையும், இதற்கு சரியான பதில் கூற முடியாது சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சரும் அவரது குழுவும் தத்தளித்ததையும் குறிப்பிடலாம்.

பக்க கூட்டங்கள் என்று பார்க்கும் பொழுது, தமிழ் நாட்மை தளமாக கொண்டு இயங்கும் ‘பசுமை தாயாகம’ என்ற அமைப்பின் ஆதரவில் நடைபெற்ற நான்கு பக்க கூட்டங்களையும் குறிப்பிடலாம். காரணம் இவ் பக்க கூட்டங்களில் ஐ.நா.வின் பிரதிநிதிகள், திருமதி ஜஸ்மீன் சுக்கா, அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் போன்றோர் உரையாற்றியதை குறிப்பிடலாம்.

மற்றைய பக்க கூட்டங்களில் ஐந்து ஆறு தமிழர் உரையாற்ற எட்டு ஒன்பது தமிழர் கேட்பார்கள். தமிழர் தமிழர்களிற்கு கூட்டம் வைப்பதற்கு ஜெனிவா செல்ல வேண்டுமா? உரையாற்ற வருவோரை இங்கு குறை சொல்லவில்லை. இக் கூட்டங்களின் ஒருங்கிணைப்பிற்கு பின்ணனிகள் உண்டு.
கேள்வி இக்கூட்டத்தொடர் சிறிலங்காவுக்கு நெருக்கடியாக அமைந்திருந்தது என கருதுகிறீர்களா?
பதில் நிட்சயமாக இவ் 37வது கூட்ட தொடர் சிறிலங்காவிற்கு மிகவும் நெருக்கடி நிறைந்ததாக காணப்பட்டது. இவ் கூட்டத் தொடரின் பலாபலன்கள் சிறிலங்கா கூடிய விரைவில் அனுபவிக்க போகிறது.

கேள்வி 37ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பூகோள ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் அடுத்த கட்டம் என்ன? சிறிலங்கா ஒத்துக்கொண்ட 177 விடயங்களையும் நடைமுறைப்படுத்துகிறதா என்பதை ஐநா கண்காணிக்குமா? அடுத்தடுத்த கூட்டங்களில் இதன் முன்னேற்ற அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுமா?

பதில் உண்மையை கூறுவதனால் ஐ.நா.மனித உரிமை சபையின் பூகோள ஆய்வு இதுவரையில் எந்த நாட்டையும் நெருக்கடிக்கு உள்ளாகியதாக இல்லை. ஒரு முறை, இஸ்ரேல் இவ் பூகோள ஆய்வில் தாம் கலந்து கொள்ள போவதில்லையென ஒதுங்கியது. இறுதியில் இஸ்ரேலை சமரசம் செய்து பூகோள ஆய்வில் கலந்து கொள்ள வைத்தார்கள்.
சிறிலங்காவை பொறுத்தவரையில் இது மூன்றவது பூகோள ஆய்வு. முன்னைய இரண்டு பூகோள ஆய்வில் சம்மதித்த பல விடயங்களை சிறிலங்கா இன்று வரை செய்ய முன் வரவில்லை. ஆகையால், இவ் 177 விடயங்களை செய்யும் என்று நாம் எதிர் பார்க்க முடியாது.
ஆனால் ஐ.நா. சபையின் வேறு பட்ட பிரிவுகள், சிறிலங்காவின் பல விடயங்களை மிகவும் உண்ணிப்பாக கண்காணித்து கொண்டிருக்கிறார்கள் என்பது பலர் அறியாத தெரியாத விடயம்.

கேள்வி 30/1 தீர்மானத்தை மனித உரிமை பேரவை ஐநா பாதுகாப்பு சபைக்கு சமர்ப்பித்து போர்க்குற்றவியல் நீதிமன்றில் இலங்கையின் போர்க்குற்றத்தை விசாரிக்க வேண்டும் என சில தமிழ் தரப்புக்கள் கோரிவருகின்றன, இது சாத்தியமானதா?
பதில் நல்ல சிந்தனை, இவர்கள் கூறுவது கேட்பதற்கு இனிமையாக தான் உள்ளது, ஆனால் இவர்கள் முதலில் ஐ.நா. விதி முறைகள், அணுகு முறைகள், சரித்திரத்தை படிக்க வேண்டும் ஆராய வேண்டும்.
ஐ.நா.மனித உரிமை சபை மூலம் ஏதோ நாட்டை பாதுகாப்பு சபைக்கு சமர்பித்து சர்வதேச போர் குற்றவியல் நீதி மன்றிற்கு அனுப்புவது என்பது இலேசான காரியம் அல்ல. இதற்கு நாங்கள் ஐ.நா.வின் மிக முக்கிய அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெற வேண்டும். விசேடமாக அமெரிக்காவின் ஆதரவின்றி நாம் ஒன்றையும் சாதிக்க முடியாது.
ஐ.நா.மனித உரிமை சபையின் தீர்மானத்தையே ஊதாசீனம் செய்தவர்கள், ஐ.நா.மனித உரிமை சபை மூலம் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சிப்பது என்பது, அப்பாவி தமிழ் மக்களின் வாக்கு வங்கியை நோக்கிய வேலை திட்டமே அல்லாது யாதார்த்தமான வேலை திட்டம் அல்லா.
உணர்ச்சிவச அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்டவர்கள் மீது சவாரி செய்கின்றனர் என்பது தான் உண்மை.

கேள்வி 30/1 இலக்க தீர்மானத்தை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கத்திற்கு இரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் ஒருவருடம் நிறைவடைந்துள்ளது. மிகுதி உள்ள ஒரு வருடத்திற்குள் சிறிலங்கா ஏற்றுக்கொண்ட விடயங்களை நிறைவேற்றுமா? நிறைவேற்றவில்லை என்றால் ஐநாவின் அடுத்த கட்டம் என்ன?

பதில் தீர்மானத்தில் உள்ள முக்கிய விடயங்கள் எதையும் எந்த சந்தர்ப்பத்திலும் சிறிலங்கா நடைமுறைப்படுத்த மாட்டாது. இப்பொழுது சிறிலங்கா செய்வது யாவும், வடக்கு கிழக்கு முற்று முழுதாக சிங்கள பௌத்த மயமாகும் வரை காலம் கடத்தும் வேலை திட்டமே. அதாவது சர்வதேசத்திற்கு சாட்டு போக்கு சொல்லி நேர அவகாசம் கேட்பது.

வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு ஏழுபது வருடங்களிற்கு மேலாக எதையும் செய்யாத சிங்கள பௌத்த அரசுகள் இப்பொழுது எதையோ செய்யுமென எதிர்பார்ப்பது சிறுபிள்ளை தனம்.
ஐ.நா.மனித உரிமை சபை சிறிலங்கா மீது படிப்படியாக மிகவும் கடுமையான தீர் மானங்களை நிறைவேற்றும்.

கேள்வி ஐநா மனித உரிமை ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சிறிலங்கா விடயத்தில் ஐநா உறுப்பு நாடுகள் மாற்று வழியை கையாள வேண்டும் என கூறியிருந்தார். மாற்று வழி என ஐநா மனித உரிமை ஆணையாளர் எதனை கருகிறார் ?

பதில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கூறும் மாற்று வழி என்பது, ஆங்கிலத்தில் ருniஎநசளயட தரசளைனiஉவழைn என்பார்கள். அதாவது, ஒரு நாட்டுடைய உள்நாட்டு சட்ங்களிற்கு அமைய, வேறு நாடுகளில் போர்குற்றம், மனிதபிமான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்து நீதி காண்பது.
இவ்வழி மூலமே, முன்னாள் ஜனதிபதி மகிந்த ராஜபக்சாவும் சில இராணுவ அதிகாரிகளும் 2010ம் ஆண்டு பிரித்தானிய சென்ற சமயம், பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்கள், பிரித்தானியவின் சட்டத்திற்கு அமைய இவர்கள் மீது வழக்கு தொடுத்தார்கள்.
ஐரோப்பாவில் பல நாடுகளில் இவ்வழி மூலம் சிறிலங்காவின் போர் குற்றவாழிகளிற்கு நாம் வழக்கு தொடர முடியும்.
புலம் பெயர் வாழ் தமிழர் இவற்றை செய்ய முன்வராது, இரவு பகலாக தமக்குள் பிரச்சனைகளை வளர்த்து கால நேரத்தை வீண் விரயம் செய்கின்றனர். புலம் பெயர் வாழ் தமிழர் பிரச்சனைகளின் பின்ணனியில் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு உள்ளது என்பதை எத்தனை பேர் உணருகிறார்கள்?

கேள்வி ஐநா மனித உரிமை பேரவை செயல்திறன் அற்ற ஒரு சபை என்ற விமர்சனங்களும் சில தமிழர் தரப்பால் முன்வைக்கப்படுகிறது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஐநா மனித உரிமை பேரவை கூட்டங்களில் கலந்து கொண்டு அதன் செயற்பாடுகளை கவனித்து வரும் நீங்கள் ஐநா மனித உரிமை பேரவையை எப்படி பார்க்கிறீர்கள்

பதில் இவ் உணர்ச்சிவச விமர்சனத்தை முன்வைப்பவர்களுக்கு மீண்டும் கூறுகிறேன், இவர்கள் ஐ.நா. விதி முறைகள், அணுகு முறைகள், சரித்திரத்தை படிக்க வேண்டும்.
நாம் விரும்புவது போல் ஐ.நா. நடக்க வேண்டுமென எதிர்பார்ப்பது மிகவும் மிலேச்ச தனம்.
ஐ.நா.சபை மிகவும் அண்மை காலம் வரை – ரூவன்டா, சூடான், வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளில் என்ன செய்தார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

எமக்குள் பல பிரிவுகளும், ஒற்றுமையற்ற மாறுபட்ட வேலை திட்டங்களும் தமிழீனத்தை அழிவு பதையில் இட்டு செல்கிறது என்பதை ஐ.நா.வை குறை கூறுபவர்கள் உணருகிறார்களா?
ஐ.நா.வை குறை சொல்பவர்கள் யாவரும், தாம் முதலில் சரியானதை எமது மக்களிற்கு, விசேடமாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு செய்கிறார்களா என்பதை சிந்திக்க வேண்டும்.

கேள்வி அண்மைக்காலத்தில் இலங்கையிலிருந்து ஜெனிவாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது, இவர்களின் வருகை ஏதாவது பிரயோசனம் மிக்கதாக உள்ளதா?

பதில் உண்மையை கூறுவதனால், கடந்த 37வது கூட்ட தொடருக்கு வருகை தந்திருந்த காணமல் போனோரின் உறவினர்கள், பெற்றோர், சகோதர சகோதரிகள் இரண்டு பிரிவாகவும், இரணைதீவிலிருந்து கடந்த 28வருடங்களாக இடம் பெயர்ந்து வாழ்வோரின் பிரதிநிதி ஒரு பிரிவாக மூன்று வேறுபட்ட பிரிவுகளாக வருகை தந்திருந்தனர். இவ் பிரிவுகளிற்கான பிரிவின் காரணத்தை இன்றும் நாம் புரிந்து கொள்ளவில்லை.
திரு சிங்கம் தலைமையில் வருகை தந்திருந்த குழுவினர், மிகவும் குறுகிய காலம் மட்டும் ஜெனிவாவில் தங்கியிருந்தாலும், மிகவும் அருமையாக வேலை திட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். சகலரையும் எந்தவித வேறுபாடின்றி சந்தித்து தகவல்களை பரிமாறியிருந்தார்கள்.
இதே போல் இரணைதீவிலிருந்து இடம் பெயர்தோர் சார்பாக வந்திருந்த பிரதிநிதியும் வேலை திட்டங்களை முன்னெடுத்தார்.
ஆனால், வேறு மூவர் கொண்ட குழுவின் வேலை திட்டம் என்பது மிகவும் மந்தநிலையிலேயே காணப்பட்டது. காரணம், அவர்களை அழைத்தவர்கள், இவர்களிற்கு பேச்சு சுதந்திரம், மற்றவர்களை சந்தித்து கலந்தரையாடும் சுதந்திரத்தை வழங்கியிருக்கவில்லை.

இவர்களை அழைத்த குழுக்கள் தங்களை பெருமை படுத்தவும், தங்களது சுயலாபத்திற்காக மட்டுமே நாட்டிலிருந்து வந்தவர்களை அழைத்திருந்தார்கள். இவர்களில் சிலர் சமூதயத்தில் செல்ல காசுகள். காணமல் போனோர் விடயமாக வந்தவர்களிற்கு தங்கள் பற்றிய சமூதாயப் பார்வை தெரியாதிருப்பதற்காகவே, வந்தவர்களை மற்றவர்களிடமிருந்து ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

காணமல் போனோரின் உறவினர்களாக இவர்கள் ஐ.நா.விற்கு வருகை தரும் பொழுது, இவர்கள் எவ்வளவோ கஸ்டத்தின் மத்தியில், எவ்வளவோ எதிர்பார்ப்புடன் மனித உரிமை குழுவிற்கு வருகை தந்தார்கள். என்னை பொறுத்த வரையில், இக் குழு மிகவும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டது. இவர்களிற்காக நாம் அனுதாபப்படுவதற்கு மேலாக, வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையே காணப்பட்டது.

கேள்வி 37ஆவது கூட்டத்தொடரில் இம்முறை தமிழர் தரப்பால் 20க்கும் மேற்பட்ட பக்க நிகழ்வுகள் நடைபெற்றன. இதனால் ஏதாவது பிரயோசனம் என கருதுகிறீர்களா

பதில் ஐ.நா.மனித உரிமை சபை, முன்னைய ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு போன்றவற்றுடன் வடக்கு கிழக்கு வாழ் மக்களுக் இழைக்கப்படடுள்ள அநீதிகளுக்கு நியாயம் கேட்டு இரு தசாப்தங்களிற்கு மேலாக பாரீய வேலை திட்டங்களை செய்து வருகிறோம். இவற்றிற்கு பல பிரிவுகளின் ஐ.நா. அறிக்கைகள் ஆதாரமாக உள்ளது. ஐ.நா.வேலை திட்டங்கள் அறிக்கைகளை வாசிக்க முடியாதவர்கள் இவை எப்படியாக புரியும்?

இவற்றை குழப்புவதற்காக, மகிந்த ராஜபக்சாவின் கால பகுதியில், அவரது அமைச்சரவையில் கடமையாற்றிய ஓர் தமிழ் அமைச்சரின் அனுசாரணையுடன் நன்றாக திட்டமிடப்பட்டு, 2012ம் ஆண்டு முதல் பிரான்ஸில் வாழும் ஒருவர் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சினால், ஐ.நா.மனித உரிமை சபையில் களம் இறக்கப்பட்டார். இவர் தான் பத்தொன்பது வருடங்களாக ஐ.நா.வில் பணி புரிவதாகவும், தான் ஒரு வழங்கறிஞரென கதை அளக்க தொடங்கினார்.

இவரது வரவின் முக்கிய நோக்கம், ஐ.நா.வில் வலுவாக நடைபெறும் தமிழர் தரப்பை குழப்புவதே. விடயம் விளங்காத பல உணர்ச்சிவச புலம் பெயர் வாழ் தமிழர்கள் இதில் இணைந்து செயற்படுகிறார்கள். ஆனால் இவர்களால் விசுவசமாக உண்மையாக நடைபெற்ற நீண்ட கால தமிழர் தரப்பு வேலை திட்டத்தை குழப்ப முடியவில்லை. இதனை நன்றாக அவதானித்த சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, தமது அனுசாரனையுடன், முன்னாள் பாதுகாப்பு படையினரை முதல் முதலில் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா.மனித உரிமை சபையில் களம் இறக்கியது.

ஓன்றை மட்டும் இவ் செவ்வி மூலம் கூற விரும்புகிறேன். கபடங்கள் நிறைந்த இவ் நபர், தான் ஒர் வழங்கறிஞர் என்பதையும், இவர் பத்தொன்பது வருடங்களாக ஐ.நா.வில் பணி புரிவதையும் ஆதார பூர்வமாக நிருபித்தால், இவை நிருபணமான அன்றுடன், எனது மனித உரிமை செயற்பாட்டிலிருந்து விலகி செல்வதற்கு என்றும் தயாராகவுள்ளேன்.

ஒர் முக்கிய குறிப்பு. இவருடன் இணைந்து வேலை செய்பவர்கள் யாரும் – இவ் கபட நபரின் நாளாந்த, மாதாந்த, வருடாந்த செலவிற்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்ததுண்டா?
எம்மால் ஒரு அமைப்பையே பேண முடியாத நிலையில், ஏழுக்கு மேற்பட்ட அமைப்புகளை இவர் நடத்துவதற்கு இவருக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பதை இவருடன் இணைந்து நிற்பவர்கள் ஆராய்ந்ததுண்டா?
கடந்த 37வது கூட்ட தொடரில், தான் தமிழீழத்தின் ஜெனிவா, பிறசில்ஸிற்கான நிரந்தர பிரதிநிதியாகவும் தன்னை அறிவித்துள்ளார்.

இவை யாவும் ஒர் தனிமனித செயற்படாக இருக்க முடியாது. போராடியது யாரோ! இறந்தது யாரோ! சொத்துக்களை பறிகொடுத்தது யாரோ! இவர் தமிழீழத்தின் நிரந்தர பிரதிநிதியாம்!
உண்மையை கூறுகின்றேன். இவ் பாதுகாப்பு படையினருக்கும், 2012ம் மனித உரிமை சபையில் வேலை திட்டங்களை ஆரம்பித்த தமிழர் பிரிவிற்கும் இடையில் மிக நல்ல உறவு நிலவுகிறது. ஐ.நா.மண்டபத்தில் மூலை முடக்குகளில் நின்று சந்திப்புக்களை நடத்துகிறார்கள்.

இவர்களின் வேலை திட்டத்தை அவதானியுங்கள். காலை ஒரு பக்க கூட்டம், மதியம் ஒரு பக்க கூட்டம், மாலை ஒரு பக்க கூட்டம் என தமிழர் விடயத்தில் 20க்கு மேற்பட்ட பக்க கூட்டங்களும், ஆறு ஏழு ஒன்றரை நிமிட உரையும் மனித உரிமை சபையில் நடைபெற்றால் தமிழர் தரப்பை எந்த சர்வதேசம் கணக்கில் கொள்ளும்?
இப்படியாக வேறு எந்த இனம், எந்த நாட்டிற்கு ஐ.நா.வில் நடைபெறுகிறது? இது எல்லாம் நன்றாக திட்டமிடப்பட்டு சிறிலங்கா அரசின் ஆதரவுடன் நடைபெறும் வேலை திட்டங்கள். இவற்றை உணர்ச்சிவச வாதிகள் புரிந்து கொள்வதற்கு காலம் இருக்கிறது.

கேள்வி பக்க நிகழ்வுகளில் சிங்கள தரப்பிற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற மோதல்கள் பற்றி என்ன கருகிறீர்கள்?

பதில் என்னை பொறுத்த வரையில், இவ் விடயத்தில் தமிழர் தரபில் முன்னின்று விடங்களை மேற்கொண்ட இருவரது பக்கத்தில் நியாயம் உள்ளது. இவர்கள் இருவரும் எதிர்கொண்ட சிங்கள தரபு எனப்படுவோர், ஐ.நா. மனித உரிமை சபை பற்றி எந்தவித அறிவோ கருசணையும் கொண்டவர்கள் அல்ல. இவர்கள் தமிழர்களது இன அழிப்பு, கொலை கொள்ளை, பாலியல் வன்முறை ஆகியவற்றை மேற்கொண்டவர்கள். இப்படியான நபர்களை தமிழர் தரபு வேறு என்ன வழியில் கையாள முடியும்?

ஆனால் ஒன்று, இவர்கள் இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டிருந்தால், ஐ.நா.வை பொறுத்த வரையில் இரு தரப்பும் அடையாள அட்டையை பறி கொடுத்து ஐ.நா.விற்கு வெளியில் அனுப்பப்பட்டிருப்பார்கள். ஐ.நா.வின் கவாலாளிகள் சம்பவத்தை அறிந்த வந்த வேளையில் யாவும் அமைதியாகி விட்டது.

கேள்வி சர்வதேச பௌத்த உதவி அமைப்பை சேர்ந்த சரத் வீரசேகர போன்றவர்கள் ஐநா மனித உரிமை பேரவையில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி என்ன கருதுகிறீர்கள்

பதில் இவர்கள் ஊதியத்திற்கு வேலை செய்வதுடன், தாம் செய்த போர் குற்றங்களை நியாயப்படுத்துபவர்கள்.
நாம் சரியான விவாதங்களை முன் வைக்கும் வேளையில், இவர்கள் கூட்டங்களிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார்கள். இவர்களால் விவாதம் செய்யும் திறமை கிடையாது. தமிழர் தரப்பில் ஐ.நா.மனித உரிமை சபையில் உள்ள தொன்னாறு வீதமானவர்கள் போல், இவர்களும் உணர்ச்சி பொங்கும் சிங்கள பௌத்த வாதிகள்.
இவர்கள் சிங்கள புத்திஜீவிகளோ, கல்விமான்களோ அல்லது மனித உரிமை செயற்பாட்டாளர்களோ அல்ல.

About Thinappuyal News