90 மாணவர்களை உள்ளடக்கிய சாதிக்கும் சந்ததியின் 6ம் கட்டம். புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் பெருந்திரள் மக்களுடன் சாதித்தது..

127

சாதிக்கும் சந்ததியின் 6ம் கட்ட நிகழ்வானது இன்று காலை 9.30 மணியளவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியிருந்தது. 6ம் கட்டத்திற்கென உள்வாங்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து அந்நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள 5 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அப்பாடசாலைகளில் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்து வறுமையோடு கல்வியை தொடரும் பாடசாலை மாணவர்கள் மேற்படி செயற்திட்டத்தில் உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில் ,
தாயகத்தில் உள்ள மாணவர்களின் நிலையான கற்றல் செயற்பாடுகளை உறுதிசெய்யும் வகையில் கடந்த வைகாசி மாதம் முதல் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன், சாதிக்கும் சந்ததி என்னும் செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
வறுமையால் தொடரும் மாணவர்களின் பாடசாலை இடைவிலகலை தாயகத்தில் இல்லாமல் செய்யும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்டுவரும் இச்செயற்திட்டத்தில் முன்னைய ஐந்து கட்டங்கள் ஊடாக ஏற்கனவே 222 மாணவர்கள்உள்வாங்கப்பட்டநிலையில் இன்றைய தினம் நடைபெற்ற ஆறாம் கட்டத்தோடு இச்செயற்திட்டம் 312 மாணவர்களைஉட்சேர்த்துள்ளது.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில்  அகவணக்கத்துடன் ஆரம்பித்த  இந்நிகழ்வை தலைமை தாங்கிய அப்பாடசாலை பிரதி அதிபர் அவர்கள் தனது தலைமையுரையில், திருக்குறளை உதாரணம் காட்டி ,
பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்த பிள்ளைகளுக்கு இப்படியான தைத்தபடியான சீருடையும் பாடசாலை உபகரணங்களும் வழங்குவது மிகவும் பொருத்தமானது என்றும் இந்த நல்ல செயலுக்கு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.  பெறுமதி வாய்ந்த இச்செயற்திட்டம் மென்மேலும் தொடர்ந்து வறுமையால் பாதிப்புறும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும்  தெரிவித்தார்.
இந்நிகழ்வில்,
ஆனந்தபுரம் அ.த.க. பாடசாலை ,
சிவநகர் அ.த.க. பாடசாலை,
கோம்பாவில் தமிழ் வித்தியாலயம்,
மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயம்,
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி,
ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு
1.சீருடை தைத்தபடி
2.குறிப்பு நூல்கள்(கொப்பிகள்) 10
3.நூற்பை – 1
ஆகியன வழங்கப்பட்டன.
ஐந்து பாடசாலைகளிலிருந்தும் ஆசிரியர்கள் ஒருவர் வீதமும் பெற்றார் அல்லது பாதுகாவலரும் மாணவர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டிருந்தனர்.
சிறப்புற இடம்பெற்ற இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்,
சாதிக்கும் சந்ததி என்கிற இந்தத் திட்டத்தின் மூலம் பெற்றோரில் இருவரையும் அல்லது ஒருவரை இழந்துள்ள இப்பிள்ளைகளுக்கு ஓரளவுக்காவது உதவ வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டு இன்று வழங்கப்படும் உதவிகளுடன் இது 312 மாணவர்களைச் சென்றடைந்துள்ளது.
கல்வியில் நீங்கள் உயர்ந்த இடத்திற்கு வாருங்கள். உங்கள் குடும்பத்தில் அம்மா அல்லது அப்பா அல்லது இருவரும் இல்லை என்கிற ஏக்கத்தை விடுங்கள்.எங்கள் சமூகத்தைக் கட்டி எழுப்புங்கள். உங்களுக்கு இயலுமான உதவிகளை நாம் செய்து தருகிறோம்.
இன்றைய இந்த உதவியை ஜேர்மனி டோட்மண்ட் மக்களும் வர்த்தகர்களும்
வழங்கினார்கள். அவர்களுக்கு உங்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன் என்றார்.
image6  image8 image12
SHARE