ரஷ்யா பேரிங் கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பலில் பயணித்தவர்களில் 52 பேர் பலியாகி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

109

 

ரஷ்யா பேரிங் கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பலில் பயணித்தவர்களில் 52 பேர் பலியாகி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

மீனவர்கள் உட்பட 62 பேருடன் பயணித்த தென்கொரியா மீன்பிடி கப்பல் ரஷ்யாவின் பேரிங் கடல் பகுதியில் மூழ்கியது.

கப்பலில் பயணித்தவர்களில் 35 இந்தோனேசியர்களும், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 13 பேரும் தென்கொரியாவை சேர்ந்த 11 பேரும் அடங்குவதாக தென்கொரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கப்பலில் பயணித்த சிலர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பே இந்த விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் தென்கொரியாவில் சொகுசு ரக கப்பல் ஒன்று மூழ்கியதில் 300 பயணிகள் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

TPN NEWS

SHARE