இலங்கையின் ஆட்சிபீட போர் வரலாறுகளில் மஹிந்தவின் உத்திகள்….

341

இலங்கையின் போர் வரலாற்றில் அப்போதைய, ஆட்சிபீடத்திலிருந்த டி.எஸ்.சேனநாயக்க(ஒக்டோபர் 20,1948 – மார்ச் 22, 1952) சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரும், தேசத்தந்தையும் ஆவார். இவர் கொழும்பு புனித தோமையார் கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் சிறிது காலம் நில அளவைத் திணைக்களத்தில் எழுத்தாளராகப் பணியாற்றினார்.

tttt

அதன் பின்னர் தனது தந்தையாருக்கு சொந்தமான இறப்பர் தோட்டத்தைக் கவனிக்க சென்றுவிட்டார். 1929இல் இலங்கையில் சட்டவாக்க கழகத்தில் ஓர் உறுப்பினரானார். 1931இல் மாநில அவைக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் வேளாண்மை காணி அமைச்சரானார். வேளாண்மை மறுமலர்ச்சிக்கு பெரிதும் உழைத்தார். 1946இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முniபாவ பட்டத்தை மறுத்தார். எனினும் பிரித்தானியருடன் நல்லுறவை விரும்பினார். 1947இல் நடந்த பொதுத்தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இலங்கையின் முதலாவது பிரதமரானார். பெப்ரவரி 04,1948இல் பிரித்தானிய ஆதிக்கம் முற்றுப்பெற்று முழு இலங்கையையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்ற டி.எஸ்.சேனநாயக்க அவர்கள் கல்லோயாத்திட்டத்தை முடக்கி வைத்தார்.

இவரின் மகன் டட்லி சேனாநாயக்க கல்கிசை புனித தோமையார் கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் கேம்பிறிஜ் கோர்ப்பஸ் கிறிஸ்டிக் கல்லூரியில் இயற்கை அறிவியல் துறையில் இவர் படிப்பை மேற்கொண்டார். பின்னர் லண்டன் மிடில் டெம்பிளில் பாரீஸ்டராகப் பணியாற்றினார். இலங்கை திரும்பிய டட்லி, டெடிகமை தொகுதியிலிருந்து ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் இலங்கை அரசாங்க சபைக்கு 1931ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் பின்வரிசை உறுப்பினராக இருந்தார். (இவரது தந்தை அப்போது வேளாண்மைத்துறையில் அமைச்சராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.)

1953இல் குதிரைச்சவாரியின் போது விழுந்து காயமடைந்து டி.எஸ்.சேனநாயக்க அவர்கள் இறந்துவிட இவருக்குப்பின் டட்லி சேனாநாயக்க இலங்கையின் பிரதமரானார். ஐக்கியதேசியக் கட்சியின் தலைவராக இருந்த இவர் சுதந்திர இலங்கையின் பிரதமராக மூன்று தடவைகள் பதவி வகித்தார்.
டட்லி சேனாநாயக்கவின் ஆட்சிக்காலம் (1952-1953) வரை மற்றும் (1960) (1965-1970) வரை ஆட்சியிலிருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் இலங்கையில் சுபீட்சமான நிலைமை ஓரளவு காணப்பட்டது. அதன் பின்னர் சேர்.ஜோன்.லயன்ஸ் கொத்தலாவல (1953-1956) வரை ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார். சேர்.ஜோன்.லயன்ஸ் கொத்தலாவல காலத்தில் தமிழ், சிங்கள, துவேசநிலை கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையத் தொடங்குகின்றது. அதன் பின்னர் ளு.று.சு.னு பண்டாரநாயக்க (1956-1959) வரை செவ்வனவே ஆட்சியை நெறிப்படுத்தி வந்தார். அப்பொழுது இலங்கையின் பொருளாதாரம் சற்று வீழ்ச்சியாக காணப்பட்ட பொழுதிலும் இவரது தந்திரமான ஆட்சிமுறையினால் நாடு திறம்படவே காணப்பட்டது.

அதன் பின்னர் விஜயநந்த திசாநாயக்க (1956-1960) வரை பண்டாரநாயக்கவிற்கு உறுதுணையாக செயற்பட்டுவந்தார். அதன் பின்னர் ஆட்சிபீடத்திற்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் முதல் பெண் பிரதமராக வந்தார். (இவரே உலகின் முதல் பெண் பிரதமருமாவார்.) (1960-1965) (1970-1977) (1995-2001) வரைக்கும் பிரதமராக இருந்தார். சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிகாலத்தின் போது இலங்கையின் ஆயுதக்குழுக்களுடன் போர் கணிசமான அளவில் காணப்பட்டாலும் கூட உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிப்பதில் சிறிமாவோ பண்டாரநாயக்கா பெரிதும் பாடுபட்டு வெற்றியும் கண்டார். இவரது ஆட்சிக்காலத்தை மக்கள் பெரிதும் பாராட்டினர்.

அதனைத் தொடர்ந்து வில்லியம் கொப்பலாவ (1972-1978) வரை ஆட்சிபீடத்திலிருந்தார். இவரால் இலங்கையில் பெரிய அளவில் நன்மைகள் இருக்கவில்லை. அதனைத்தொடர்ந்து ஆட்சிக்குவந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன (1978-1989) வரை தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார். ஆப்பொழுது இலங்கையின் நாலாப்பக்கங்களிலும் போர் நடைமுறையிலிருந்தது. ஜே.ஆரை ஒரு தந்திரசாலி என்றும் கூறுவர். அவரே இலங்கையின் யாப்பை உறுதிபட வகுத்தவர். அந்த பெருமை அவரையே சாரும்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற போர்வையில் இலங்கையில் தரையிறங்கியது. இதன் போது விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் ஆயுத ஒப்படைப்பு நடைபெற்றது. விடுதலைப்புலிகள் சார்பில் திருவாளர் யோகரட்ணம் யோகி கலந்துகொண்டிருந்தார். அதன் பின்னர் இந்திய இராணுவம் விடுதலைப்புலிகளுடன் போரைத்தொடுத்தது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் இவரது ஆட்சியின்போது கொல்லப்பட்டனர். இதன்போது விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள், பொருட்கள், உபகரணங்களை வழங்கியவர் பிரேமதாசா அவர்களே.

இவர் (1989-1993) வரை ஆட்சி புரிந்தார். இலங்கையின் தமிழ் இனத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையில் பல்வேறு விரிசல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை வைத்தே பிரேமதாசா அவர்கள் தந்திரோபாயமாக ராஜீவ்காந்தியை கொலை செய்தார். இதனால் விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் நிரந்தரமான பகை உருவாகியது. அதன்பின் இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறிவிட்டது. மறுபடியும் பிரேமதாசா அரசாங்கத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போர் நிலைமை உருவாகியது. இதன்போது மேதின ஊர்வலத்தில் கொழும்பு ஆமர் வீதியில் வைத்து தற்கொலைத்தாக்குதலில் பிரேமதாசா அவர்கள் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் னு.P விஜேயதுங்க (1993-1995) வரை ஆட்சியிலிருந்தார். இலங்கையின் வடபகுதியில் உக்கிர மோதல் வெடித்தது. தமிழர் பகுதிகளெங்கும் குண்டுவீச்சுக்கள் நடத்தப்பட்டன. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் ஆட்சிபீடமேறிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (1995-2004) வரை தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார்.
விடுதலைப்புலிகளுக்கெதிரான பல்வேறுபட்ட போர் தந்திரோபாயங்களை கையாண்ட போதிலும் வெற்றிபெற முடியவில்லை. மாறாக இலங்கை அரசாங்கம் பொருளாதார வீழ்ச்சி கண்டது. இதில் மீள முடியாத சந்திரிக்கா ஆட்சிபீடத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தார்.

விடுதலைப்புலிகளுடனான சமரசப்பேச்சுக்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதன்போது ஒன்றில் ஆட்சியை மாற்றி அரசாங்கத்திடம் கையளிக்கவேண்டும் அல்லது விடுதலைப்புலிகளிடம் தனிநாடு கொடுக்கவேண்டும் என்ற நிலைக்கு அப்போதைய சந்திரிக்கா அரசு தள்ளப்பட்டது.
இதற்கிடையில் (2002-2004) காலப்பகுதிக்குள் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். காற்பங்கு அரசாங்கத்தையே அவரால் நடத்த முடிந்தது. விடுதலைப்புலிகளுடன் பிரபா-ரணில் ஒப்பந்தம் நடந்தேறியது. இந்த ஒப்பந்தம் எவ்வித பயனும் அளிக்கவில்லை. அதே சமயம் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் சமாதான பேச்சுவார்த்தை இடம்பெற்று சிறிதுகாலம் சமாதானம் நிலவியது. இச்சமாதான காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் 29பேரை சுட்டுக்கொன்றார். இதில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்ட குழுக்களின் தலைவர்களும், பொதுமக்களும் அடங்குவர். இக்காலகட்டத்தின் போது ஒஸ்லோ தொடக்கம் வரை பேச்சுவார்த்தைகள் ஏழு கட்டங்களாக நடைபெற்று தோல்வியில் முடிந்தன. இருந்தும் இலங்கையில் சிறிது சிறிதாக போர்வெடித்தது.

ரட்ணசிறி விக்கிரமநாயக்க (2001-2002) 2004 ஆட்சி காலத்தில் பிரதமராக இருந்தார். அதன் பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமோக வெற்றிபெற்று (2004- இன்றுவரை) தனது ஆட்சிபீடத்தை தக்கவைத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கவிடயமாகும். இவருக்கு முன்னர் இருந்த பதினாறு ஆட்சியாளர்களும் விடுதலைப்புலிகளுடனான போரில் வெற்றி காணவில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மிகவும் மனத்துணிவுடன் பல்வேறு நாடுகளின் உதவியுடன் விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு முள்ளிவாய்க்காலில் முற்றுப்புள்ளி வைத்தார்.
பாரிய இழப்புக்களை இந்த அரசு சந்தித்த போதும் மஹிந்த ராஜபக்ஷவின் காய்நகர்த்தல்கள் ஒவ்வொன்றும் மிகத்தந்திரமாகவே இருந்தன. இன்றும் கூட ஜெனிவாவில் இலங்கையின் மஹிந்த அரசுக்கு எதிராக போர்க்குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இந்த நிலையில் மஹிந்தவின் ஒவ்வொரு நகர்வும் மிகத்தந்திரமாகவே அமைந்திருக்கின்றது எனலாம்.

இந்தியா உட்பட 48 நாடுகள் போர்க்குற்றம் தொடர்பாக எதிர்த்து வாக்களித்த போதிலும் மஹிந்தவின் மன உறுதி, அவரின் துணிச்சல் மிகவும் ஆணித்தரமாகவே காணப்பட்டன. இவை இவ்வாறிருக்க அடுத்துவரும் காலப்பகுதிகளில் மஹிந்தவின் ஆட்சி தக்கவைக்கப்படுமா? என்ற கேள்விக்கு மஹிந்த சிந்தனை காத்திரமாக அமையுமா? என்ற கேள்விக்குறியும் நிலவுகிறது. விடுதலைப்புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்த மனவுறுதி, விவேகம் இறுதிவரை தொடரும் என்பது கேள்விக்குறியாகவேயுள்ளது.

– நெற்றிப்பொறியன் –

SHARE