முழுக்க நனைந்த பின் றிசாட்டிற்கு முக்காடு எதற்கு?

140

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வந்து கொண்டிருப்பதை யாவரும் அறிவர்.அ.இ.ம.கா உம்  ஏதோ ? அரசாங்கத்தை விட்டு விலகப் போவது போன்ற சாடைகளை ஆரம்பத்தில் வெளிப்படுத்திய போதும் தற்போதைய நிலைமைகளை வைத்துப் பார்க்கும் போது  அரசாங்கத்துடன் உறவாடும் முடிவைத் தான் எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி இற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அரசு வழங்க தயாரான வேளை அமைச்சுப் பதவி கேட்டு நிற்பதே இதற்கு போதுமான சான்றாகும்.எதிர்க்கும் மனோ நிலை கடுகளவாவது இருந்திருப்பின் அமைச்சு பற்றி தற்போது சிந்தித்திரிக்க மாட்டார்கள்.

north-muslims

ஜனாதிபதித் தேர்தலில் அரசை ஆதரிக்க முடிவெடுத்த அ.இ.ம.கா கிழக்கு மாகாண சபையில் தனித்து இயங்கப் போகுறதாம்.முடிவுகளை சுயாதீனமாக ஆராய்ந்து எடுக்கப் போகிறார்களாம்.அப்படியானால்,இவ்வளவு நாளும் சுயாதீனமாக எடுக்க வில்லையோ?என்ற வினா எழுகின்ற போதும் இம் முடிவு எதற்கு என்பதை சற்று யூகித்துக் கொள்ள முடியும். முழுமையாய் நனைந்த பின் முக்காடு எதற்கு?

தற்போதைய முஸ்லிம்களின் மனோ நிலைகள் தற்போதைய அரசிற்கு எதிராக உள்ளது யாவரும் அறிந்ததே!ஜனாதிபதித் தேர்தலில் அ.இ.ம.கா அரசிற்கு ஆதரவளித்தால் மக்கள் மனோ நிலை அ.இ.ம.கா இற்கு எதிராக மாறும் மாறாவிட்டாலும் மாற்றுப் படும் என்பதனை அ.இ.ம.கா நன்கே அறியும்.இதனை எதிர் கொள்ளும் வழி முறைகளையும் அ.இ.ம.கா மக்கள் செய்தாக வேண்டும்.கிழக்கு மாகாண சபையில் சுயாதீனமாக இயங்கப் போகிறோம் எனக் கூறினால் தாங்கள் அரசிற்கு முற்றாக ஆதவானவர்கள் அல்ல தற்போது அரசிற்கு ஆதரவளிப்பதே தகுந்த தீர்மானம் என்ற மனோ நிலை மக்களிடையே உருவாக்கப்பட்டு மக்களை தங்களோடு தோடர்ந்து இணைத்துப் பயணிக்க ஏதுவாக அமையும்.

அஸ்வர் எம்.பி யினது பாராளுமன்ற பதவியினை மாகாண சபை உறுப்பினர் அமீர் அலிக்கு வழங்கி அரசு அழகு பார்க்க எத்தனிப்பது அ.இ.ம.கா ஜனாதிபதியுடன் இணைவதற்கு எவ்வாறான ஒப்பந்தங்களை செய்திருக்கும் என்பதனை சற்று யூகித்துக் கொள்ளலாம்.

அ.இ.ம.கா தங்களுக்கு ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கை ஜனாதிபதிற்கு மிகைத்து இருந்ததால் அ.இ.ம.கா இனை தங்களோடு இணைத்துக் கொள்ள அதீத பிரயத்தனம் எடுக்காத போதும் தங்களை இவ் விடயத்தில் பெரிய ஒரு மதிப்புள்ள கட்சியாக வெளிக்காட்ட அ.இ.ம.கா அதீத பிரயத்தனங்களை செய்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியை ஆதரவளிக்க முடிவெடுத்தால் ஆதரிக்க வேண்டியது தான்.மக்களை திசை திருப்பும் முயற்சிகள் தற்போது எடுபடும் அளவு மக்கள் அரசியல் அறிவு குன்றியவர்களாக இல்லை.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் (சம்மந்துறை)

.jvpnews

SHARE