பிரபல நடிகரை மிரட்டிய பாஜக வினர்

தனது காரை வழிமறித்து மிரட்டிய பாஜகவினரின் வீடியோவை, நடிகர் பிரகாஷ்ராஜ் தற்பொழுது வெளியிட்டுள்ளார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்தவர் பிரகாஷ்ராஜ். தனது வித்தியாசமான நடிப்பின் முலம் அனைத்து மொழி மக்களின் மனதை கவர்ந்தவர்.

பிரகாஷ்ராஜ் டிவிட்டரில் பாஜக அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் வருத்தெடுத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கர்நாடகாவில் பிரகாஷ்ராஜின் காரை வழிமறித்த பாஜக வினர் அவரிடம் ரகளையில் ஈடுபட்டனர். ஆனால் பிரகாஷ்ராஜ் இதற்கு எதிர்வினை காட்டாமல் காரில் சிரித்த படியே இருந்துள்ளார். பிரகாஷ்ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், பாஜக பக்தர்களின் வேலையை பாருங்கள். இந்த ஜோக்கர்கள் கூட்டம் என்னை மிரட்ட நினைத்தால், அதனால் நான் பயப்படப் போவதில்லை, மேலும் பலமாகிக் கொண்டே தான் போவேன் என தெரிவித்துள்ளார்.

About Thinappuyal News