முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன.!

 

 

 

 

 

 

நாட்டிலுள்ள அரச முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (18) ஆரம்பமாகின்றன. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தவணை அட்டவணையின் படி 2018 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் 2018 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நிறைவடைகின்றது. எதிர்வரும் ரமழான் நோன்புக்காக 2018.05.12 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் 2018.06.17 ஆம் திகதி மீண்டும் அரச முஸ்லிம் பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News