ராஜபக்ஸவுக்கு குறி சொன்ன கழுதைகள்! (சுவாரஸ்யமூட்டும் உண்மைச்சம்பவம்)

165

 

unnamed (8)வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் மக்கள் செறிவாகக்கூடும் பிரதான தெருக்கள் முதல் ஆளரவமற்ற குச்சொழுங்கைகள் வரை மகிந்த ராஜபக்ஸ (சுவரொட்டிகளில்) நின்று சிரிக்கின்றார். கையசைக்கின்றார். சில பகுதிகளில் மக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க ஒதுங்கும் இடங்களில் கூட இருகைகள் கூப்பி வணக்கம் சொல்லுகின்றார்.
இளைஞர்கள் யுவதிகள் குழுவாகக்கூடி காரச்சுண்டல், நொறுக்குத்தீனிகள், துரித உணவுகள் சாப்பிடும் சாலை ஓரங்களில் முகத்தை கொஞ்சம் விறைப்பாயும் (சுவரொட்டிகளில்) வைத்துக்கொள்ளுகின்றார்.
ஏன் உந்த விறைப்பு? வெற்றிலை எச்சில் துப்பல்களும், கழிவு ஒயில் வீச்சுகளும், சாணப்பூச்சுகளும் ஆங்காங்கே பரவலாக நடைபெறுவதால் வந்த முரைப்பு என்று நீங்கள் நினைத்தால் அது தவறப்பு! அப்புறம் என்னாத்துக்கு…? சொல்லித்தொலையன்… நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தீச்சீ… புரளிய கௌப்பி அடிவயித்தில புளிய கரைக்கிறாங்கப்பா!
மகா ஜனங்களே! இந்தாப்பாருங்க… நல்லாக்கேட்டுக்குங்க… “2015ம் வருடம் சனவரி 08க்கு அப்புறமும் சிலோனில “நானே ராஜா நானே மந்திரி” இப்பிடி அப்பிடி எல்லாம் புதிய சனநாயகம் பேசுகின்றார் அல்லவா, அதற்காகவே உந்த விறைப்பு!
ஏலே… என்ன… நான் சொல்லுறது சரிதானே. நாங்கல்லாம் அப்பவே அப்பிடி. பதவி துட்டு துண்டுக்காக சட்டத்தையே மாத்தி எழுதீனவங்கைய்யா!
தங்களை தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்வதென்றால் இந்த நாட்டில் தேர்தல்கள் எதற்கு? மக்களுக்கு இங்கு என்ன வேலை? 2015 இல் இதற்கான பதில் நிச்சயம் கிடைத்துவிடும் என்று நீங்களும் நானும் நம்புவோமாக! புடிச்சான்ய்யா பாயின்டு. ரைட்டா மேட்டருக்கு வாய்யா.
வடக்கில பாருங்கோ, திரும்புகிற இடமெல்லாம் “தாய் நாட்டின் தீர்ப்பு மகிந்த”, “ஜெயமே மகிந்த” என்று, கொட்டை எழுத்துல எழுதின சுவரொட்டிகள் கண்ணைக்கட்டுகின்றன.
உதிலிருக்கிற மிகவும் நகைச்சுவையான விசயம் என்னவென்றால், 2020க்கும் மகிந்தவுடன் கைப்பிடிச்சி போவோம் என்று ஒரு சுவரொட்டி மிமிக்கிரி பண்ணுது பாருங்கோ! சின்னப்புள்ளத்தனமா இல்லே? எவன்டா அவன் அப்பிடிச்சொன்னது?
2020ம் வருடத்துக்கும் போவோமெல்லே… என்று சொல்றாங்கய்யா சொல்றாங்க! ஆனால் 2014ம் வருட இறுதியிலேயே (இம்புட்டு நிமிசத்துல) கழுதைகள் தமது தீர்ப்பை சொல்லி விட்டன. (ஒளிப்படங்களை பாருங்கைய்யா பாருங்க. உத்துப்பாருங்க) ராஜபக்ஸவுக்கு தேர்தல் முடிவுகள் குறித்து கழுதைகள் குறி சொல்லுகின்றன.
பசி பட்டினி வறுமையிலிருக்கும் ஐந்தறிவு சீவன்கள் தமது தீர்ப்பை சொல்லி விட்டன. இருந்துதான் பார்ப்போமே, அதே பசி பட்டினி வறுமை, உரிமை மறுப்பிலிருக்கும் ஆறறிவு மனுசர்கள் என்ன செய்யப்போகின்றார்கள்?
கவனியாதோர் கவனத்துக்கு:
நாளை இந்தக்கழுதைகள் எங்காவது நஞ்சுண்டோ விபத்துண்டோ இறந்து கிடந்தாலோ, அடித்தோ சுட்டோ வெட்டியோ கொலை செய்யப்பட்டாலோ அன்றி, இந்த பாழாய்ப்போன ஈழக்கிழவன் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டு சவமாய் கிடந்தாலோ, நீதிக்கு புறம்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டாலோ அதுபற்றியெல்லாம் இந்த நாட்டு மக்கள் உச்சுக்கொட்டி அலட்டிக்கொள்ளக்கூடாது. மனித உரிமைகள், மனித விழுமியங்கள் நலிந்து மலிந்து விழுக்காடாய்ப்போய் அதளபாதாளத்துக்குள் கிடப்பதால், இதெல்லாம் இங்கு சகஜமப்பா!
unnamed (11) unnamed (10) unnamed (9) unnamed (8)
செய்தியறிக்கையிடல்: ஈழக்கிழவன்
நன்றி – ஒளிப்பட உதவி: அ.ஈழம் சேகுவேரா    

 

SHARE