ரிசாத் பதியுதீனை கறிவேப்பிலை என்கிறார் ஞானசார தேரர்!-

144

bbs

rishad12.jpg2_2ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீனை கறிவேப்பிலை என்று பொது பல சேனாவின் பொதுச்செயலர் கல்கொடத்தே ஞானசார தேரர் வர்ணித்துள்ளார்.

ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இரண்டு தரப்புகளுமே அதிகாரத்தைக் கைப்பற்ற கடுமையாக மோதுகின்றன. இருதரப்புக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.

சில மேலதிக வாக்குகளைப் பெறுவதற்கு சில வேளைகளில் கறிவேப்பிலைகள் தேவைப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரிசாத் பதியுதீனுக்கும் பொது பல சேனாவுக்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

SHARE