ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன பிரசன்னமாகியிருக்கவில்லை.

120

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஆதரவளிக்கவில்லை என பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

mainpic_Lஹோமாகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றின் போது அவர் பகிரங்க மேடையில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன பிரசன்னமாகியிருக்கவில்லை.

ஹோமாகம தேர்தல் தொகுதி தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். இந்த தொகுதியில் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இருக்கின்றார்.

சிரேஸ்ட மாகாணசபை உறுப்பினர் ஒருவர் இருக்கின்றார். அமைச்சர் பந்துல குணவர்தன இந்த இடத்திற்கு வரவில்லை.

இதனையிட்டு நான் வருந்துகின்றேன். அமைச்சரை நான் அழைத்தேன், பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூட்டத்தில் பங்கேற்க முடியாத எனவும் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தை அல்ல இதுவே முக்கியமானது என நான் கூறினேன்.

பேச்சுவார்த்தைகளை ஒத்தி வைத்து விட்டு கூட்டத்தில் பங்கேற்குமாறு கோரினேன்.  ஐந்து நிமிடங்களின் பின்னர் கூட்டம் ஆரம்பாகிவிட்டது வர முடியாது என தெரிவித்தார்.

கட்சியில் முரண்பாடுகள் பிளவுகள காணப்படுகின்றன. அமைப்பாளர்களுக்கு இடையில் சில பிரச்சினைகள் உண்டு.

எனினும், அதற்காக இந்த தேர்தல் நேரத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிக்கொள்வது வேதனையளிக்கின்றது என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

– See more at: http://www.newstamilwin.com/show-RUmszCTcKZht2.html#sthash.iV0CRPG7.dpuf

SHARE