8.5 மில்லியனுக்கு விசுவாசம் என்றால், மகிந்தவின் பில்லியன்களுக்கு எதை செய்யச்சொல்வார் அமைச்சர் சத்தியலிங்கம்? -அமைச்சரின் இந்த கூற்றானது பல்வேறு மக்கள் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

129
 sathiyalingam 5544d
mhnpt6mpiweb14083507008.5 மில்லியன் கொடுத்ததற்காக, வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள் முன்னாள் சுகாதார அமைச்சரும் இன்றைய எதிரணிகளின் பொது வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேனவிற்கு வடமாகாண மக்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கடந்த 06.12.2014 அன்று தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இரத்தச் சுத்திகரிப்பு மையத்தைத் திறந்து வைக்கும்போதே வடமாகாண சுகாதார அமைச்சர் மேற்கண்வாறு தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் சிறுநீரகக் கோளாறினால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அத்தகைய நோயாளிகள் செயற்கைமுறையில் சிறுநீரகத்தைச் சுத்திகரிப்பதற்கு வேறுமாவட்டங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதாகவும் இதற்குப் பெருமளவு நிதி தேவைப்படுவதுடன், நேரவிரயம் மொழிப்பிரச்சினை என ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்து வருவதால் அவர்கள் வவுனியாவிலேயே சிறுநீரகச் சுத்திகரிப்பு செய்து கொள்வதற்கான வழியேற்படுத்திக்கொடுக்க வேண்டுமென்றும் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதற்கமைவாகவே தற்பொழுது வவுனியா பொதுமருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு மையம்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த சிகிச்சை மையம் வழங்கப்பட்டதன் பின்னரே அவசரமும் அவசியமும் மிக்க வவுனியா மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
தேர்தல் நேரத்தில் முன்னைநாள் சுகாதார அமைச்சருக்கு வடக்கு மக்கள் அனைவரும் நன்றியுடையவராக இருக்கவேண்டும் என்று வடமகாண சுகாதார அமைச்சர் தெரிவித்திருப்பதானது வைத்தியசாலை வட்டாரத்திலும் வடக்கு மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் யாரை ஆதரிக்கப்போகிறது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்காத நிலையிலும் இவ்விடயத்தில் அவசரப்பட வேண்டாம் என்று தலைமை அறிவுறுத்தியிருக்கும் நிலையிலும் அமைச்சரின் இந்த கூற்றானது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இப்படிச் சொல்பவர் காபெட் வீதி அமைத்துக் கொடுத்ததற்கும் தொடரூந்து வசதி செய்துகொடுத்ததற்கும்கூட வடமாகாண மக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் சொல்வாரோ என்று மக்களும் அரசியல் அவதானிகளும் தங்களுக்குள் பேசிக்கொள்வதை வடபகுதி முழுவதிலும் கேட்கமுடிகின்றது.
-கவரிமான்-
SHARE