திஸ்ஸஅத்தநாயக்க ரணில்விக்கிரகசிங்கவின் புலனாய்வாளர் ஜ.ம.சு கூட்டமைப்புக்குள் நுழைந்துள்ளமை சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது

107

 

பொது வேட்பாளரின் திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமற்றது!– விலகியது குறித்து திஸ்ஸ அறிக்கை
பொது வேட்பாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவையும் நடைமுறைச் சாத்தியமற்றது. இதனை வைத்து நாட்டைக் கொண்டு செல்ல முடியாது என்பதனாலேயே தான் கட்சியிலிருந்து விலகியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

தான் கட்சியை விட்டும் விலகியதற்கான காரணத்தைத் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் பொது வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவிப்பது எனத் தீர்மானித்தது. இவற்றில், 24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதிக்குள்ள

நிறைவேற்று அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்குதல்,

அரசாங்கத்திலுள்ள 20 அமைச்சர்களை எதிர்க்கட்சிக்கு அழைத்துவருதல்,

100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்குதல் என்பன அடங்குகின்றன.

இந்த எந்தவொன்றும் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதனாலேயே தான் கட்சியிலிருந்து விலகியதாகவும் அவர் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர்

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே பேச்வார்த்தைகளை முன்னெடுத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்மானத்துக்கு வரவேண்டும்

அதனைவிடுத்து அவசர அவசரமாக கருத்துக்களை வெளியிடுவதாலோ, ஏனைய கட்சிகளுடன் பேசுவதன் மூலமோ எதிர்பார்க்கின்ற பலாபலன்களை பெற்றுக்கொள்ள முடியாது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி ணக்க ஆøணக்குழு அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம் அதனை நடைறைப்ப டுத்துவதே அரசாங்கத்திற்கும் அதேநேரம் எமதுநாட்டுக்கும் நன்மையைப் பயப்பதாக அமையும் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தேசிய இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ச்சியாக பேச்வார்த்தைகளில் ஈடுபட்டுவந்தமை வர ளூவற்கத்தக்கது. எனினும் இந்தப் பேச்சுகளில் முன்னேற்றங்களுக்கு பதிலாக அது பின்னோக்கி சென்றுகொண்டிருப்பது தெளிவாகின்றது. இருதரப்பினரதும் நிலைப்பாடுகளை எடுத்து நோக்கும் போது,  இந்தப் பேச்சுவார்த்தை பயணமானது கேள்விக்குறியை எதிர்நோக்கியுள்ளது என்றே கூறத்தோன்றுகிறது.

ஐக்கிய தேசியக்கட்சியை பொறுத்தவரையில் பேச்வார்த்தைகளின் மூலமே எந்தவொரு விடயத்துக்கும் தீர்வினை  முன்வைக்க முடியும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது. அந்தவகையில்தான் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தையும் பார்க்கின்றது. இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந் தாலும் அரசாங்கமாக இருந்தாலும் விட்டுக்கொடுப்புக்கள் மிக மிக அவசியமானவை. இதனை இருதரப்பினருளூம கடைப் பிடிக்க தவறுகின்றனர். எதிர்க்கட்சி என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு எந்தவித ஒத்துழைப்புக்களையும் வழங்குவதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு ஐக்கிய தேசியக்கட்சி தமது ன்னெடுப்புக்களை மேற்கொண்டுவருகின்றது அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

TPN NEWS

 

SHARE