முள்ளி வாய்க்கால் மேற்கு, முள்ளி வாய்க்கால் கிழக்கு பகுதிகளில் 25 குடும்பங்கள் பாடசாலையில் தஞ்ச

118

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் மக்களுக்கான நிவாரண உதவிப் பொருட்களை இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள் வழங்கி வைத்தனர்.
இது குறித்து மேலும் அறிய வருவதாவது,
சமீபத்தில் கடும் மழையின் போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டு, முள்ளி வாய்க்கால் மேற்கு, முள்ளி வாய்க்கால் கிழக்கு பகுதிகளில் 25 குடும்பங்கள் பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தனர்.
இதுபற்றி மாகாணசபையின் கவனத்திற்கு, வடமாகாணசபை உறுப்பினர்கள்  துரைராசா ரவிகரன் , மேரிகமலா குணசீலன் ஆகியோர் கொண்டு வந்ததையடுத்து , அமைச்சர் டென்னீஸ்வரன் அவர்கள் மேற்படி 25 குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்களை வழங்க முன்வந்தார்.
அதன்படி இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் தலைமையில் அவரது பணிமனையில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது..இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வடமாகாணசபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன் , மேரிகமலா குணசீலன் ஆகியோர் வழங்கி வைத்தனர். மேற்படி நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும் கலந்து கொண்டிருந்தார்.
unnamed (4) unnamed (5) unnamed (6) unnamed (7) unnamed (2) unnamed (1) unnamed (3)
TPN NEWS
SHARE