கட்சித் தாவிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நாளை சுகாதார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

108

 

அண்மையில் கட்சித் தாவிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நாளை சுகாதார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

நாளை காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, திருப்தியில் ஜனாதிபதி மேற்கொண்டு வரும் மத வழிபாடுகளில் திஸ்ஸ அத்தநாயக்கவும் பங்கேற்றுள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இன்று நாடு திரும்ப உள்ளார்.

இதன்படி நாளை பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பணத்திற்காகவோ அல்லது பதவிக்காகவோ தாம் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

– See more at: http://www.tamilwin.net/show-RUmszCSUKZgu0.html#sthash.rSNSpCqW.dpuf

SHARE