மகிந்த அரசு வெற்றி பெறாவிட்டால் கருணாவின் நிலை கேள்விக்குறி என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவை ஆதரிக்க வேண்டும் என்கிறார்

134

 

karadiyarau_5

தமிழ்த் தேசியக் கூட்மைப்பு உண்மையாக தமிழர்களில் பற்று இருக்குமாக இருந்தால், தமிழர்களை கௌரவமாக வாழவைக்க வேண்டுமாக இருந்தால் இம்முறை ஐனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் தெரிவித்தார்.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெரியகல்லாற்று உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற ஒரு நிகழ்வில் பிரதியமைச்சர் முரளிதரன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த கட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சென்ற முறை சரத் பொன்சேகாவை ஆதரிக்கச் சொல்லியது இம்முறை எதிரணி வேட்பாளரை ஆதரிக்கச் சொல்லுமா எதிரணியில் தமிழினத்திற்கு எதிரான காட்சிகள் கூட்டுச் சேர்ந்துள்ள துவேசக்கட்சிகள் இருக்கின்ற நிலையில் அவற்றிக்கு வாக்களிக்கச் செல்லலாமா? சொன்னால் அது ஒரு தமிழ் கட்சியா தமிழர்களில் பற்றுள்ளவர்களா என்ற பல விடயம் இருக்கின்றது.

நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வேண்டுவது என்னவெனில் உண்மையாக தமிழர்களில் பற்று இருக்குமாக இருந்தால், தமிழர்களை கௌரவமாக வாழவைக்க வேண்டுமாக இருந்தால் இம்முறை ஐனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

அப்படித் தெரிவித்தார்கள் ஆயின் அவர்களை உண்மையாக நாங்கள் மதிக்கலாம், மாறாக எதிரணிக்கு ஆதரவு தெரிவித்தால் கூட்டுச் சேர்நதுள்ள துவேசக்கட்சிகளை ஆதரித்து தமிழ் மக்களை குழிதோண்டி புதைப்பதற்கு சமனாகும்.

தற்போதைய பொது வேட்பாளர் மைத்திரிபால எங்களிடம் இருந்து பாய்ந்து போனவர்தான். அவர் முதல் நாள் இருந்து எங்களுடன் சாப்பிட்டார், மறுநாள் அவரினை நாங்கள் காணவில்லை. அவருடன் இன்று சேர்ந்திருப்பவர்கள் யார்? ஐக்கிய தேசியக் கட்சி சேர்ந்திருக்கின்றது அதன் தலைவர் எத்தனையோ தரம் தேர்தலில் தோல்வியுற்றவர். அவர் இவருக்கு கீழ் இருந்து செயற்பட விரும்புவாரா கடைசி வரைக்கும் விரும்பமாட்டார். கடந்த தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஜக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் செயற்பாடு குறைவாக இருந்தது.

இதேபோன்றுதான் மைத்திரிக்கும் நடக்கப் போகின்றது. தற்பொழுது பத்திரிகைகளில் முகம் கொடுக்கின்றார் குழப்பக் கூடாது என்பதற்காக அப்படி வென்றாலும் ரணில் மைத்திரிக்கு கீழ் இருந்து வேலை செய்வாரா இது நடக்கின்ற காரியமா சும்மா பொய்வேலைகள்.

இவர்களால் ஒரு போதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை இவர்கள் 100 நாட்களுக்குள் நீங்குவோம் எனக் கூறுகின்றனர். இதனை இவர்கள் எவ்வாறு மேற்கொள்ளலாம் சட்டத்தின் படி நீக்குவதாக இருந்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். பாராளுமன்றத்தில் அது தமிழ் மக்களுக்கு நல்ல விடயம்தான் ஆனால் தற்பொழுது அவர்களுடன் கூட்டுச்சேர்ந்துள்ள கட்சிகள் தமிழனை கண்ணில் காட்ட முடியாத துவேசம் கதைப்பவர்கள். இப்பொழுது எமது கட்சி தூய்மை அடைந்துள்ளது.3089488_orig

காரணம் இவரகள் வெளியேறியமையே தற்பொழது ஜனாதிபதி அவர்களின் கட்சியில் தற்பொழுது எவ்வித துவேசம் பிடித்த கட்சிகளும் இல்லை, அடுத்து சந்திரிகா அம்மையார் தொடர்ச்சியான யுத்தத்தினை மேற்கொண்டு தமிழ் மக்களை அழிதே்த ஒருவர். அவரின் ஆடசியின் கீழ் எத்தனையாயிரம் உயிரினை நாங்கள் இழந்துள்ளோம்.

எங்களுடைய இந்த அரசாங்கம் செய்த மக்களுக்கு செய்த வேலைகள் எந்தவொரு அரசாங்கமும் செய்யவில்லை. இதில் கல்வி தொடக்கம் சமுர்த்தி வரை எண்ணில் அடங்காதவை. இவை அனைத்தும் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டவை.

இவை மாத்திரமின்றி அரசாங்க ஊளியர்களுக்கு அடிப்டைச் சம்பளத்தினை எந்தவொரு அரசாங்கமும் இதுவரை அதிகரிக்கவில்லை. ஆனால் இந்த அரசாங்கம்தான் அதிகரித்தது. இது போன்று எரிபொரள் விலைக்குறைப்பு மற்றும் அரிசிக்கு விலை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது இருக்கின்ற இந்த நல்ல சூழ் நிலையினை நாங்கள் பயன்படுத்த வேண்டும். நாங்கள் அனைவரும் வாழ பிறந்தவர்கள். இதற்காகத்தான் யுத்தத்தினை நிறுத்தி மக்களின் அழிவுகளை குறைத்தோம். ஏதோ ஒரு வகையில் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள்தான்.

நாங்கள் தொடர்ந்து பாதிக்கப்ட்டுக் கொண்டு இருக்கக் கூடாது. இந்த நாட்டினைப் பொறுத்தளவில் 18 வீதமானவரகள்தான் தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றார்கள். எனவே எந்தவொரு தமிழ் பேசும் மக்களோ ஜனாதிபதியாக வரமுடியாது. ஒரு சிங்களவர்தான் ஜனாதிபதியாக வருவார். இதேவேளை சிங்களவர் ஒருவருக்குத்தான் ஜனாதிபதியாக்கத்தான் நாங்களும் வாக்களிப்போம். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

எனவே வெல்லக் கூடிய ஒருவருக்கு வாக்களிப்பதன் மூலம் எமது பிரதேசத்திற்குத் தேவையான அபிவிருத்திகளை வென்றெடுக்கலாம். எனவே எமது சமூகம் எதிர்த்து எதிர்த்து வாக்களித்து எமது சமூகம் கீழ்நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.

இதற்கு சிறந்த உதாரணம் எவரினதோ கதையைக் கேட்டு சென்ற முறை ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகவுக்கு வாக்களித்து நடந்தது என்ன 18 லட்சம் வாக்குகளால் மகிந்த ராஐபக்ச அவர்கள் வெற்றி பெற்றார். இந்த முறையும் கருத்துக் கணிப்பிடு சொல்லுவது என்வென்றால் குறைந்தது ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் 22 லட்சம் வாக்குகளால் வெல்வார். எனவே தங்களுக்கு யார் வெல்லப் போகின்றார் என்பது தெளிவாக இருக்கும் எனவே தோல்வி அடைகின்ற ஒரு நபருக்கு வாக்களிப்பதினால் எவ்வித பிரயோசனமும் இல்லை.

எனவே இந்த சந்தர்ப்பத்தினை மிகவும் பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும். ஏன் இதனை நான் சொல்கின்றேன் என்றால் இன்று அங்கால போவதும் இஞ்சால போவதுமான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

உறுதியாக இருக்கின்ற எவனும் போகையும் மாட்டார் வரவும் மாட்டார். கொள்கைகள் உள்ள எவரும் இதனை மேற்கொள்ள மாட்டார்கள். இவர்கள் எல்லாம் மதில்ல இருக்கின்ற பூனைகள் எங்கால பாயலாம் என்று குந்திக் கொண்டு இருப்பவர்கள்.

இப்படி பாய்கின்ற கொள்கையில்லாதவனை ஜனாதிபதியாக்கலாமா இதே வர்க்கத்தினை சேர்ந்தவர்தான் பொது வேட்பாளர் அவர்கள் இன்று பாராளுமன்றத்திலே 128 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவைதவிர மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஜனாதிபதி இருக்கின்றார். அவளவு பலம் வாய்ந்தவராக ஜனாதிபதி அவர்கள் இருக்கின்றார். எனவே அசைக்கமுடியாது.

 

SHARE