அபுதாபி ஹொட்டல்களுக்கு படையெடுக்கும் ஜேர்மானியர்கள்

132
அபுதாபி ஹொட்டல்களில் தங்கும் ஒட்டுமொத்த வெளிநாட்டவர்களில் ஜேர்மானியர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.அபுதாபிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் யார் அங்குள்ள ஹொட்டல்களில் அதிகளவில் தங்குகிறார்கள் என்ற பட்டியலை சுற்றுலா மற்றும் கலாசார ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்தியர்களை அடுத்து, 22 சதவீத பங்களிப்புடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 11 சதவீத பங்களிப்புடன், ஜேர்மனி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்த கணக்கீட்டு காலத்தில் ஹொட்டல் வருவாய், 14 சதவீதம் அதிகரித்து 133 கோடி டொலராக வளர்ச்சி கண்டுள்ளது.

மேலும், ஒட்டுமொத்த அளவில், முதல் 10 மாத காலத்தில் அபுதாபிக்கு வருகை புரிந்த வெளிநாட்டு விருந்தினர்களின் எண்ணிக்கை, 85 லட்சம் என்ற மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.

SHARE