ஐ.எஸ்.எல். கால்பந்தில் அதிக கோல்கள்: பிரேசில் வீரர்கள் முதலிடம்-இந்தியா இரண்டாவது இடம்

113
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்தவர்களில், பிரேசில் வீரர்களை விட இந்திய வீரர்கள் 3 கோல்கள் பின்தங்கியுள்ளனர்.

ஐ.எஸ்.எல். போட்டியில் நடந்து முடிந்துள்ள 56 லீக் போட்டிகளில் மொத்தம் 121 கோல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், பிரேசில் வீரர்கள் 26 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளனர். சென்னையின் எப்.சி. அணியில் இடம்பெற்றுள்ள இலனோ புளூமர் 8 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.

இந்திய வீரர்கள் மொத்தம் 23 கோல்கள் அடித்துள்ளனர். கோவா அணியின் ரோமியோ பெர்னாண்டஸ், சென்னை அணியின் ஜிஜே லால்பெக்லுவா ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்துள்ளனர். பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் வீரர்கள் தலா 11 கோல்கள் அடித்து அடுத்த இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்

SHARE