யுவன் இசைக்கு நான் ரசிகன்-சொல்கிறார் ரஜினி 

95
கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த், டாப்சி, விவேக் ஆகியோருடன் தனுஷ் நடிக்கும் படம், ‘வை ராஜா வை’. ஆர்.ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு. யுவன்சங்கர் ராஜா இசை. கல்பாத்தி எஸ்.அகோரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ் தயாரிக்கின்றனர்.இப்படத்தின் ஆடியோ விழாவில் ரஜினி பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில், ‘எனது மகள் ஐஸ்வர்யா, ‘3’ என்ற முதல் படத்தை ஆர்ட் பிலிம் மாதிரி இயக்கினார். அடுத்த படத்தை எப்படி இயக்கப் போகிறார் என நினைத்தேன். ‘வை ராஜா வை’ கதை பற்றி கேள்விப்பட்டேன். இன்னொரு வித்தியாசமான கோணத்தில் ஆக்ஷன் படமாக இயக்கியுள்ளார் என்பதை அறிந்து சந்தோஷமாக இருக்கிறது. இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவின் ரசிகன் நான். அவரது ‘பருத்திவீரன்’, ‘பில்லா’ ரீமேக் படங்களில் அவரது இசையை ரசித்தேன். படக் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்’ என்று சொல்லியிருந்தார். பிறகு இளையராஜா, வைரமுத்து, கார்த்திக் பேசினர். லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா அஸ்வின், பாலா, எஸ்.ஜே.சூர்யா, கே.வி.ஆனந்த், அனிருத் உட்பட பலர் கலந்துகொண்டனர்

SHARE