பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் 9வது நினைவேந்தல் நிகழ்வு

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் 9வது நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.30 முதல் இரவு 9 மணி வரை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்தநிகழ்வு (Portcullis house, boothroyd room) போட்கலிஸ் ஹெளஸ் பூத்ரொட் அறையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரித்தானிய தொழில்கட்சியின் முக்கிய பிரமுகர்களான நிழல் சான்செலர் ஜோன் மெக்டோனல்ட், நிழல் சுகாதார செயலாளர் ஜொனாதன் அஷ்வேத், நிழல் சர்வதேச வர்த்தக செயலாளர் பெரி காடினர், நிழல் வெளியுறவு அமைச்சர் பார்பியன் ஹமில்டன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கையில் இனப்பிரச்சினை தீர வேண்டும். தமிழர்களுக்கு தமது ஆதரவை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தொழில்கட்சி தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வை தமிழர்களுக்கான தொழில்கட்சி ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் சென் கந்தையா தெரிவித்துள்ளார்.

 

About Thinappuyal News