பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் திலும் அமுனுகமவிடம் இவ்வாறு விசாரணை

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிடம் 12 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அண்மையில் கண்டி தெல்தெனிய, திகன போன்ற பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் திலும் அமுனுகமவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் திலும் அமுனுகமவிடம் இவ்வாறு விசாரணை நடத்தியுள்ளனர்.

நேற்று காலை பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு சமூகமளித்த தாம் இரவு வரையில் விசாரணைகளில் பங்கேற்றதாக திலும் அமுனுகம ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேலதிக விசாரணைகளுக்காக தமது செல்லிடப்பேசியை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் பொறுப்பெற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் சிலர் கொல்லபட்டதுடன், நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.

திலும் அமுனுகம இனக்குரோதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News