?????????????????????????????????

எலுமிச்சை சாறால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

நமது உடல் 60% தண்ணீரால் ஆனது. அதனால் தான் தண்ணீர் என்பது நமக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 8 அவுன்ஸ் கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். உங்களால் வெறும் தண்ணீரை குடிக்கவில்லை என்றால் பழச்சாறு போன்ற வடிவங்களில் எடுத்து கொள்ளுங்கள்.

லெமன் ஜூஸ் உங்களுக்கு மிகவும் நல்லது. பொதுவாக சிட்ரிக் அமிலத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை நம்முடைய உடலில் உள்ள நச்சு செல்களிலிருந்து நம்முடைய உடலைப் பாதுகாக்கிறது.

உங்கள் முகத்தை புத்துணர்வாக வைத்திருக்க வெறும் லெமன் வாட்டர் போதும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின் சி போன்றவை சரும கொலாஜனை வலிமையாக்கி சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கிறது.

லெமன் நீர் சீரண சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் உணவை உண்ணும் போது அதிக உமிழ்நீரை சுரக்க செய்து எளிதில் சீரணமாக உதவுகிறது.

தினமும் லெமன் ஜூஸ் குடியுங்கள். இதிலுள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுகளை எதிர்த்து போராடும்.

லெமன் சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் நமது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

லெமன் ஜூஸ் குடிக்கும் போது இதிலுள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் புற்று நோய் வராமல் தடுத்து நல்ல செல்களின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிகிறது.

About Thinappuyal News