10,000 ஓட்டங்களுடன் 100 விக்கெட்களை வீழ்த்திய இலங்கை ஆல்ரவுண்டர்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களை கடந்து, 100 விக்கெட்களை வீழ்த்தியுள்ள இலங்கை அணியின் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் மொத்தம் நான்கு பேர் இடம் பிடித்துள்ளனர்.

இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 21,032 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 440 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

தில்ஷான் மொத்தமாக 17,671 ஓட்டங்கள் எடுத்துள்ளதுடன், 154 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

அரவிந்தா டிசில்வா 15,645 ஓட்டங்களுடன் 135 விக்கெட்களை எடுத்துள்ளார்.

மேத்யூஸ் 11,076 ஓட்டங்கள் எடுத்து, 184 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

About Thinappuyal News