மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி கிராங்குளத்தில் பாரிய வீதி

(டினேஸ்)

காத்தாங்குடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கிராங்குளம் பகுதியில் கார் மற்றும் லொறி இரக வாகனங்கள் இரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காத்தாங்குடி பொலீஸார் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக மேலும் வினவிய போது கல்முனை பகுதியிலிருந்து மூதூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி இரக வாகனம் தூக்க நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னால் பயணித்துக் கொண்டிருந்த கார் இரக வாகனத்தில் மோதியுள்ளது இதன்படி இவ்விபத்தில் காரில் பயணித்த 35 வயதுடைய நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி ஆரையம்பதி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றதாக காத்தாங்குடி பொலீஸார் தெரிவித்திருந்தனர்.

About Thinappuyal News