வவுனியாவில் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த கண்காட்சி

வவுனியாவில் செஞ் கூ10 லான் முன்பள்ளியின் வருடாந்த கண்காட்சி நிகழ்வு இன்று (16) மகா கருண புத்த அமைப்பின் தலைவரும் தேரருமான கெ.குணரத்தின தலைமையில் நடைபெற்றது.
வவுனியா மதகு வைத்த குளத்தில் அமைந்துள்ள குறித்த முன்பள்ளி பாடசாலையில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றதுடன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
முன்பள்ளியின் கண்காட்சியை ‘கப்பிட்டல’; அறக்கட்டளையின் தலைவர் யோகன் பண்டார திறந்துவைத்து மாணவர்களின் கை வண்ண பொருட்களை பார்வையிட்டார்.
மங்கள விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகிய கண்காட்சி நிகழ்வுகளின் பின் முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் வவுனியா நகர முன்பள்ளி கட்டமைப்பின் தலைவர் திருமதி.ரி.கலைவாணி, முன்பள்ளியின் பொறுப்பாசிரியர் நிருபா சச்சிதானந்தன் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
    
           

About Thinappuyal News