அமெரிக்காவில் நடைபெறும் தேர்தல் விவாதங்களை போன்று மஹிந்தவுக்கும் மைத்திரிக்கும் இடையில் நேரடி தொலைக்காட்சி விவாதம்!

129

 

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்சவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேரடி விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் குழு ஒன்று இதனை ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த விவாதத்தில் சிறந்த ஆட்சி, ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் என்பவை பிரதான கருத்துக்களாக அமையவுள்ளன.

இது ஒருநாளில் மட்டுப்படுத்தப்படாமல் தொடராக நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் மேலோங்கியுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பில் இரண்டு வேட்பாளர்களுக்கும் அறிவிக்கப்படவுள்ளது.

இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் தேர்தல் விவாதங்களை போன்று அமையவேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

இந்த விவாதத்துக்கு இரண்டு பிரதான வேட்பாளர்களும் இணங்கினால் தொலைக்காட்சி ஒன்றில் இரண்டு பேருக்கும் சமமான நேரம் பெற்றுக்கொள்ளப்படும்.

இவ்வாறு நடக்குமானால் இதுவே இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இடம்பெறும் முதலாவது நேரடி விவாதமாக அமைந்திருக்கும்.

 

SHARE