புதிய மியூசிக் சேவை ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக யூடியூப் நிறுவனம்

புதிய மியூசிக் சேவை ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் மே 22ம் திகதி இச் சேவை அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

முதன் முறையாக இச் சேவையை அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்ஸிக்கோ மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் பயன்படுத்த முடியும்.

இச் சேவையின் ஊடாக Spotify மற்றும் ஆப்பிள் மியூசிக் சேவை என்பன பின்னுக்கு தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இதன் பிரீமியர் சேவையினை மாதாந்தக் கட்டணமாக 9.99 டொலர்கள் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.