முள்ளிவாய்க்கால் நோக்கி அலையென திரண்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

9ஆம் ஆண்டு தமிழினப் படுகொலைகளை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ளும்பொருட்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாக சென்றுள்ளனர்.

மாணவர்களின் இந்த சைக்கிள் பேரணி முள்ளிவாய்க்காலை சென்றடைந்ததும், காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தில் பிரதான சுடர் ஏற்றப்பபட்டுள்ளது.

9ஆம் வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் வகையில் இன்றைய தினத்தினை துக்கநாளாகவும், தமிழினப்படுகொலை நாளாகவும் வடமாகாண சபை பிரகடணம் செய்துள்ளது.

இந்நிகழ்வை நடத்துவதற்கான ஒழுங்கமைப்புகளில் வடக்கு மாகாண சபைக்கும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையில் நீடித்து வந்த இழுபறிகளுக்கு முடிவு காணப்பட்டு, அனைத்து தரப்புகளும் இணைந்து நினைவேந்தல் நிகழ்வை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

About Thinappuyal News