ஜனநாயக போராளிகள், வடமாகாண சபையினால் இணைந்து நாடத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

ஜனநாயக போராளிகள்,வடமாகாண சபையினால் இணைந்து நாடத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு காலை 11.00 மணி அளவில் முள்ளிவாய்க்கால் முன்றலில் நடைப்பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புகள், பொது மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினார்கள். பொது சுடரினை வடமாகாண சபை முதலைமைச்சர்; விக்னேஸ்வரன் அவர்கள் ஏற்றி உரையாற்றினார். முள்ளிவாய்க்கால் நினைவு தினமானது தொடர்ந்து இதே ஆண்டில் நடத்துவதாகவும். அதனை ஒரு இன அழிப்பு நாளாக அங்கிகரீக்கப்பட்டு வர வேண்டும் என முக்கியமான 05 பிரகடனங்களில் ஒன்றாக இவற்றை வெளிப்படுத்தி இருந்தார். முள்ளிவாய்க்கால் முன்றலில் ஒன்று திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் இலங்கை அரசை திட்டி தீர்த்ததுடன் காணாமல் போன உறவினருக்காகவும் அவ்விடத்தில் வேண்டிக்கொண்டனர்.

இன்றைய தினம் சில தீர்மானங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்

1. மே18 இன அழிப்பு நாளாக அங்கிகரிக்கப்பட்டு வர வேண்டும்.

2.சர்வதேச அமைப்பானது இம் மக்களுக்கு நீதியை பெற்று தர காலதாமதமின்றி தலையிட வேண்டும்.

3.கட்டமைப்பு சார் இன அழிப்பை சந்தித்து வரும் இனம் என்ற வகையில் இவற்றை தடுக்கும் வகையில் இறைமை,தாயகம் என்ற அடிப்படையில் பெற்று தர முன்வர வேண்டும்.

4.முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம் பெற்று 9 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் அவலங்கள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் போருக்கு பின்னரான பேரிட நிலைமையாக (அயளள னளையளவநச ளவைரயவழைn) அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள் கட்டமைப்பு கட்டியெழுப்ப சர்வதேஷ சமூகம் தன்னாலான உதவிகளை செய்ய வேண்டும்.

5.ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் இருந்து படையினர் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும்.

6.முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து 10 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. ஒற்றுமையின் சின்னமாக மே 18கணித்து கட்சி பேதமின்றி கொண்டு நடத்த நாம் முன்வர வேண்டும்.

  

About Thinappuyal News