முல்லைத்தீவு கடற்பகுதியில் இந்திய இலங்கை மீனவர்களால் மீன்பிடித்தொழில் பாதிப்புற்ற மக்கள் ஒன்று சேர்ந்து பெரும் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

143

 

முல்லைத்தீவு கடற்பகுதியில் இந்திய இலங்கை மீனவர்களால்

மீன்பிடித்தொழில் பாதிப்புற்ற மக்கள் ஒன்று சேர்ந்து

பெரும் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

unnamed (1)

முல்லைத்தீவு கடற்பகுதியில் இந்திய மற்றும் இலங்கை சிங்களமீனவர்கள் பெரும்படகுகள்,

பெரும் ஒளியூட்டி, இழுவைப்படகு மற்றும் றோலர் மீன்பிடிப்படகுகள் சகிதம் அத்துமீறி

நுழைந்து மீன்பிடித்தொழில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் எம்மக்களின் வலைகள் சேதத்துக்கு

உள்ளாவதுடன் தொழிலும் பாதிக்கப் பட்டு வருகின்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு

அறிவித்தும் எவ்விதப் பயனும் இல்லாத நிலையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்

கூட்டுறவுச் சங்கங்களின் சமாசமும் முல்லைத்தீவு மாவட்டகடற்தொழிளாளர் சமேளனமும்;

ஒன்றிணைந்து 12.12.2014 வெள்ளிக்கிழமை பெரும் அமைதி ஊர்வலத்தில்; ஈடுபட்டனர். இதில்;

வடமாகாணசபை உறுப்பினரும் வைத்தியகலாநிதியுமான னுச.திரு.சி.சிவமோகன் அவர்களும்

கலந்துகொண்டு தமிழர் பிரதேச வளங்கள் இன்று பலவாறாக சுரண்டப்படுவது காணக்கூடியதாக உள்ளது.

இந்த வகையில் இவ் மீனவமக்களின் பிரச்சனையை உடன் அரசு கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும்

கூறியமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE