ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும்!- மைத்திரி

128

 

ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின்பாக கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் தமது வெற்றி உறுதி ஆகிவிட்டது. இதன் காரணமாக மக்கள் பணத்தை கொள்ளையடித்த ராஜபக்ச ரெஜிமண்ட் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க முடியாது.

மக்கள் பணத்துக்கு பதில் சொல்ல வேண்டியவர்களை இந்தியா போன்ற நாடுகள் காப்பாற்றுவதற்கு சந்தர்பம் வழங்கப்பட மாட்டாது.

இலங்கைத் தீவில் மக்கள் முன்பாக இதற்கு பதில் சொல்லும் பொறுப்பு முன்னைய ராஜபக்ச ரெஜிமண்டுக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

தோல்வியின் நிலை அறிந்து தற்போது என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் தனது அரசியல் சலூனுக்கு ஒப்பானது என்று தரம் குறைத்து வருகின்றரர்.

இதனால்தான் ஒவ்வொரு அமைச்சர்களும் இன்று அரசை விட்டு வெளியேறுகின்றனர்.

இன்று ஒன்று மட்டும் சொல்ல விரும்புகின்றேன். அரசாங்கத்துக்கு உள்ளேயும் அரசாங்கத்துக்கு வெளியிலும் நடக்கும் சூழ்ச்சிகள் அறியாத ஜனாதிபதியாக இருக்கின்றமை பற்றி  மக்கள் நன்கு அறிவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 mahinda-regiment

– See more at: http://www.newstamilwin.com/show-RUmszCSYKanq3.html#sthash.3qtwX2A9.dpuf

SHARE