நித்யா மேனன் ஷூட்டிங் திடீர் நிறுத்தம் 

122
ஜீவா, துளசி நடிப்பில் ‘யான்’ படம் வெளியானது. ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கி இருந்தார். இப்படம் ‘மிட்நைட் எக்ஸ்பிரஸ்’ என்ற ஆங்கில படத்தை காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் புகார் கூறியதுடன் இயக்குனருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளார். இதுபோல் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிக்கும் மலையாள படமொன்றின் மீது புகார் எழுந்துள்ளது. ‘100 டேஸ் ஆப் லவ்’ என்ற இப்படத்தை ஜெனுஸ் மொஹமத் இயக்குகிறார். இதன் தயாரிப்பாளர் திடீரென்று போர்க் கொடி உயர்த்தி இருக்கிறார். ஏற்கனவே சொன்ன பட்ஜெட்டைவிட இப்படத்துக்கு அதிகமாக செலவழிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 10 கோடி இப்போதே செலவாகி இருக்கிறது என்று கூறி இயக்குனரிடம் சண்டைக்கு நின்றிருக்கிறார் தயாரிப்பாளர்.

மேலும் ஏற்கனவே வினித் நடித்து சமீபத்தில் வெளியான ‘ஒர்மயுன்டோ இ முகம்‘ என்ற படத்தின் கதைபோலவே ‘100 டேஸ் ஆப் லவ்‘ படத்தின் கதையும் அமைந்திருக்கிறது. வினித் நடித்த படமே ஹாலிவுட்டில் வெளியான ஒரு படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது என சரமாரியாக புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து துல்கர்- நித்யா மேனன் இருவரும் மணிரத்னம் படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார்களாம்.

 

SHARE