அமெரிக்காவில் முன்னாள் மனைவி உள்பட 6 பேரை சுட்டு கொன்ற வாலிபர்

113

அமெரிக்காவில் பென்சில் வேனியா மாகாணத்தில் உள்ள மோன்ட்கோமரியை சேர்ந்தவர் வில்லியம்ஸ் டோன் (வயது 35). இவர் நிக்கோலே என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.

வில்லியம்ஸ் டோன் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து சென்று முன்னாள் மனைவி நிக்கோலே குடும்பத்தினரை தேடி, தேடி சென்று சுட்டுக்கொன்றார்.

முதலில் அவர் சவுதாடனில் உள்ள நிக்கோலேவின் சகோதரி பேட்ரிக்கா வீட்டுக்கு சென்றார். அங்கு பேட்ரிக்கா, அவருடைய கணவர் ஆரோன்பெலிக், குழந்தை நினா ஆகியோரை சுட்டுக்கொன்றார்.

அதன்பிறகு லான்ஸ்லே நகருக்கு சென்ற அவர் மனைவி நிக்கோலேவின் தாய் ஜோன்கில், பாட்டி பேட்ரிக்கா கில் ஆகியோரை சுட்டு கொன்றார்.

பின்னர் கார்லே உள்ள நகருக்கு வந்த அவர் முன்னாள் மனைவி நிக்கோலேவையும் சுட்டு கொன்றார். மொத்தம் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர்.

அதன் பிறகு அவர் பென்ஸ்பர்க் நகருக்கு துப்பாக்கியுடன் வந்தார். அங்கு போலீசார் அவரை சுற்றி வளைத்துள்ளனர். ஆனால் எந்த இடத்தில் பதுங்கி உள்ளார் என்று தெரியவில்லை. அவரை பிடிப்பதற்காக நகரம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். அவர் ஏன் 6 பேரை சுட்டு கொன்றார் என்ற விவரம் தெரியவில்லை. முன்னாள் மனைவி மீது ஏற்பட்ட விரக்தியில் அவர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

SHARE