இலங்கை அணி வீரர் ஜெயவர்த்தனே ஓய்வு பெறுகிறார்

117
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே கடந்த ஆகஸ்டு மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டி (பிப்ரவரி 14 முதல் மார்ச் 29) முடிந்ததும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் களம் இறங்க இருக்கும் நிலையில் டுவிட்டரில் மஹேலா ஜெயவர்த்தனே வெளியிட்டுள்ள கருத்தில் இது தான் உள்ளூரில் தான் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டியாகும் என்று தெரிவித்துள்ளார்

SHARE