விஜய் ஏழை மாணவியின் மேற்படிப்பு செலவை ஏற்றுகொண்டுள்ளார்…

90

செ
ன்னை சைதாப்பேட்டையிலுள்ள டீக்கடை ஒன்றில் வேலை பார்க்கும் ஷாகுல்ஹமீது என்பவரின் மகளான பாத்திமா சைதாப்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 1109 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற்றிருந்தார். பொறியியலில் ஐ.டி துறையில் படிக்க வேண்டுமென்பது பாத்திமாவின் லட்சியமாக இருந்தாலும், குடும்பத்தின் வருமை காரணமாக எங்கே தான் மேற்படிப்பு படிக்க முடியாமல் போய்விடுமோ என ஏங்கித் தவித்தார். இவர்களது நிலையை தனது உதவியாளர்கள் மூலம் தெரிந்து கொண்ட இளைய தளபதி விஜய் பாத்திமாவின் பொறியியல் படிப்பிற்காக முழு செலவையும் ஏற்றுக்கொண்டதோடு, சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி இன்ஜினீயரிங் கல்லூரியில் இதற்கான தொகையை செலுத்தியுள்ளார். மேலும் பாத்திமாவிற்கு நன்றாக படி என்றும், எதைப்பற்றியும் கவலைப்படாதே என்று தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்துள்ளார்.  பாத்திமாவின் படிப்பிற்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்ட விஜய்க்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார் பாத்திமாவும் அவரது குடும்பத்தினரும்
SHARE