விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்பதா? – ஆட்டகார குஸ்புவின் குஷ்பு வீடு நாளை முற்றுகை

456

 

அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி உயிரை எடுக்கிற விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான், நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுபவர்கள் என்று சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு கருத்து கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை குஷ்பு வீட்டை முற்றுகையிடப்போவதாக தமிழர் முன்னேற்றப்படை அறிவித்துள்ளது.

இந்த கருத்தை தமிழகத்தில் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒருசில நாட்களில் மறந்துவிட்டனர்.

ஆனால் வெளிநாட்டு தமிழர்கள் மறக்க தயாராக இல்லையாம். அவர்கள் குஷ்புவுக்கு எதிராக இரகசியமாக அதிரடி வேலை ஒன்றை செய்து வருகின்றனராம்.

குஷ்புவின் கணவர் சுந்தர் சி இயக்கி வரும் ‘ஆம்பள’ படத்தை தமிழர்கள் வாழும் எந்த நாட்டிலும் ரிலீஸ் செய்ய விடக்கூடாது என்றும் அதையும் மீறி ரிலீஸ் செய்தால் தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

குஷ்புவின் இந்த தேவையில்லாத சர்ச்சை பேச்சால் சுந்தர் சி மற்றும் விஷாலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர் என்ற முறையில் விஷால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது இப்படி இருக்க, தமிழகத்தில் குஷ்புவிற்கு எதிராக களம் இறங்கியுள்ளனர் தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பினர்.

நடிகை குஷ்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று கூறியதை கண்டிக்கும் விதமாக நாளை வியாழக்கிழமையன்று காலை 10.00 மணிக்கு பட்டிணபாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லீத் கேஸ்டல் சாலையில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றை தமிழர் முன்னேற்றப் படையினர் அதன் தலைவர் கி.வீரலட்சுமி தலைமையில் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

kushboo ku 1 e0ae95e0af81e0aeb7e0af8de0aeaae0af81e0aeb5e0aebfe0aea9e0af8d-e0aeaee0af81e0aea9e0af8de0aea9e0aeb3e0aeb5e0af81-e0ae85e0aeb4e0ae95e0af81

 

TPN NEWS

SHARE