அன்ரனோவ் விமான விபத்தில் சிகிச்சை பெற்று வந்த விமானப் படை வீரரும் மரணம்

145
கடந்த வெள்ளிக்கிழமை அத்துருகிரிய பகுதியில் அன்ரனோவ் ஏ-32 விமானம் வீழ்ந்தபோது காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த விமானப்படை வீரரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் நேற்று இரவு உயிரிழந்தததாக கொழும்பு தேசிய வைத்தியாலை தரப்பு தெரிவித்துள்ளது.

இவர், கடும் எரிகாயங்களுடன் வைத்தியசாலையி;ல் அனுமதிக்கப்பட்டிருந்தார். கட்டுநாயக்கவில் இருந்து ரத்மலானைக்கு செல்லும் வழியில் இந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதன்போது விமானத்தில் இருந்த நான்கு விமானப்படை வீரர்கள் அதேஇடத்தில் உயிரிழந்தனர்.

antovo_fligh_down_002

 

SHARE