தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதை அவர்களே தீர்மானிக்கட்டும் – வீ.ஆனந்தசங்கரி

116

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கைசரித்திரத்தில் நடைபெறும் மிக இக்கட்டானதேர்தலாகையால் தமிழ் மக்கள் தமதுதெரிவில் மிககவனத்துடன் செயற்படவேண்டும். கடந்ததேர்தல்களில் குறிப்பாகஇரண்டுஜனாதிபதித் தேர்தலில் நடந்தவற்றைஅடிப்படையாகவைத்துபார்க்கும் போதுதமிழ் தேசிய கூட்டமைப்பு இத் தேர்தலில் தலையிடாதுஒதுங்கி இருந்துகொண்டுதமிழ் மக்களைஅவர்களின் இஸ்டப்படிசெயற்பட்டுயாருக்குவாக்களிப்பதுஎன்ற முடிவை எடுக்கஅவர்களைவிட்டுவிடவேண்டுமெனதமிழ் தேசிய கூட்டமைப்பைதமிழர்விடுதலைக் கூட்டணிவலியுறுத்துகிறது.கடந்த இரு ஜனாதிபதிதேர்தல்களில்நடந்ததவறுகளின் அடிப்படையில் தமிழ் மக்களுக்குஆலோசனைவழங்கும் தகுதியைகூடதமிழ் தேசிய கூட்டமைப்பினர் இழந்துவிட்டனர். இதன் காரணமாகவோஎன்னவோஅவர்கள் இப்போதுமாகாணசபை,பிரதேச சபைஉறுப்பினர்களுடன் பேசுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இரண்டொருநபரே இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும் ஏனையவர்கள் வெறும் ஆமாம் போடுபவர்களேஎன்பதையும்அனைவரும் அறிவர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினரைசுயநலமும் பதவிஆசையும் பெருமளவுஆட்கொண்டுள்ளமையால் மக்களைவழிநடத்தும் தகுதியையும் அவர்கள் இழந்துவிட்டனர். அத் தலைவர்களில் அநேகர்தமதுநிகழ்ச்சிநிரலின்படியேசெயற்படுவதோடுதமதுஎதிர்காலம் பற்றியகனவுடனேயும் தமதுகட்சிகளின் எதிர்காலம் பற்றியநினைவுகளுடனேயே இருக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியில்புத்தி ஜீவிகளுக்கும்,அனுபவசாலிகளுக்கும் பஞ்சமில்லை. மக்களுக்குநல்லஆலோசனைகளைவழங்கவும் திறமையானதலைமையைதகுதியுள்ளபலர்ஏற்கதயாராகஉள்ளனர். தற்போதையதமிழ் தேசியகூட்டமைப்பில்; இரண்டு மூன்றுநபர்களைதவிரஏனையோர்வெறும் ஆமாம் போடுபவர்களாகவேஉள்ளனர். முக்கியமுடிவுகளைஅந்த இரண்டு மூன்றுபேர்மாத்திரமேஎடுக்கின்றனர்.உள்நாட்டுவெளிநாட்டுஊடகவியலாளர்கள் இவர்களுடையமுடிவுகளைஒழுங்காகபத்திரிகைகளில் எழுதுவதோடு அம்முடிவுகளை திரும்பதிரும்ப மிகைப்படுத்தி வருகின்றனர். இலகுவாகவேலைசெய்யமுடியும் என்பதால்ஆமாம் போடுகின்றவர்களைவிடுத்துதமிழ் தேசிய கூட்டமைப்பினர்தகுதியானவர்களிடம் ஆலோசனைபெற்றுகாலம் கடத்தாதுபிரச்சினைகளுக்குதீர்வுகாணமுயல வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் தலையிடாதுதமிழ் மக்களைதாமாகதாம் விரும்புவருக்குவாக்களிக்கக்கூடியவகையில் அவர்களைசெயற்படவிட்டுஒதுங்கியிருக்குமாறுதமிழ் தேசிய கூட்டமைப்பைகேட்பதற்குதமிழர்விடுதலைக் கூட்டணிக்குபோதியநியாயமானகாரணங்கள் உண்டு. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்துதமிழரசுகட்சி,தமிழர்விடுதலைக் கூட்டணியைநீக்கிவிட்டுஅந்தஅணியில் தம்மைஇணைத்துக்கொண்டது. இதைதமதுசொந்த இலாபத்துக்காகவும் ஓர் அரசியல் கட்சியாகதம்மைதக்கவைத்துகொள்வதற்குமாகவே அப்படிசெய்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாகபுலிகள் சார்ந்தபுலம் பெயர்ந்தவர்களின் ஆதரவைபெறவேஅவ்வாறுசெய்தனர். இதன்உள்நோக்கம் பற்றிஅனைவரும் அறிந்ததே.
சாதாரணபொதுமக்களுக்;கு இச்செயல் தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றதவறானகருத்தைஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் அநேகபிரச்சனைகளைஎதிர்நோக்கியவர்கள் என்றும் பலதுன்பங்களோடுவடக்குகிழக்குபுலிகளின் ஆதிக்கத்தில் உட்பட்டகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதைஅவர்கள் அறிவார்கள். இன,மதபேதமின்றிஅனைத்துமக்களும் பட்டதுன்பங்கள் சொல்லில் அடங்காது. அத்துடன் அவர்கள் இழந்தஉயிரிழப்புக்கள்,உடைமைகளின் பெறுமதிகளும் கணிக்கப்படமுடியாதவை. அப்படியிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தமிழ் மக்களைதவறாகவழிநடாத்திசகலதேர்தல்களிலும்தம் இஸ்ட்ப்படிவாக்களிக்கவைத்துள்ளனர்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இந்ததுயரமானநிலைநீண்டகாலமாகநிலைத்துநிற்கிறது. மிகதுன்பகரமானவிடயம் என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தமிழ் மக்கள் புலிகளுக்குசார்பானவர்கள் என்றமுத்திரையைகுத்திவைத்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குதமிழ் மக்கள் மீதுஉண்மையானஅக்கறை இருப்பின் தாம் மௌனமாக இருந்துகொண்டுதமிழ் மக்களைதம் இஸ்டப்படி இத் தேர்தலில் செயற்பட்டுவிடுதலைப்புலிகள் என்றுகுத்தப்பட்டமுத்திரையைஅகற்றஉதவுமாறுத.தே.கூட்டமைப்பை த.வி.கூ கேட்டுக்கொள்கிறது.காலத்துக்குக் காலம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்ஒவ்வொருதேர்தல் நேரத்திலும் மிகசாதுரியமாகதமிழ் மக்களைவிடுதலைப் புலிகளின் சார்பானவர்கள் என்பதைஉண்மைக்குமாறாகசாதித்தேவந்துள்ளனர்.
நாம் எதிர்நோக்கும் சகலபிரச்சனைகளையும் ஒவ்வொருதமிழ் மகனும் மிககவனமாகபரிசீலித்துவேட்பாளர்கள்; தத்தமதுதேர்தல் விஞ்ஞாபனங்களில் முன் வைத்துள்ளவிடயங்களைநன்குஆராய்ந்துயாருக்குவாக்களிக்கவேண்டும் என்றநல்லமுடிவினைஎடுக்கவேண்டும். கடந்த இரு ஜனாதிபதிதேர்தல்களில் விட்டதவறைமீண்டும் விடாமல் பகிஸ்கரிக்கும் எண்ணத்தைகைவிட்டுதமிழர்கள் தான் ஜனாதிபதியைதெரிவுசெய்வார்கள் என்ற இறுமாப்புஎண்ணத்தையும்கைவிடுமாறுதமிழர்விடுதலைக் கூட்டணிவலியுறுத்துகிறது.

வீ.ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி

SHARE