பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா கர்ப்பமா?

111
ரஷ்யாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா சாதனைகளை தாண்டி பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார்.

ஷர-போவாவா இல்ல சுகர்-போவாவா

கடந்த 2013ம் ஆண்டு உலகின் முன்னிலை டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, தனது பெயரை மரியா சுகர்போவா என தற்காலிகமாக மாற்றிக்கொள்ள முடிவெடுத்தார்.

அவரின் முழுப்பெயர் மரியா யூரியேனா ஷரபோவா. இதில் தனது தந்தையின் பெயரான ஷரபோவாவையே சுகர்போவா என மாற்றிக்கொள்வதற்கு அவர் விரும்பினார்.

எழுத்தாளர்கள், செய்தியாளர்கள் புனைப்பெயர்களை பயன்படுத்துவண்டு. சிலர் திருமணம், மதமாற்றம் போன்றவற்றின் பின்னர் பெயரை மாற்றிக்கொள்வதும் வழக்கமானது. ஆனால் ஷரபோவா தனது பெயரை மரியா “சுகர்போவா” என மாற்றுவதற்கு முற்பட்ட காரணம் முற்றிலும் வித்தியாசமானது.

டென்னிஸ் மற்றும் விளம்பர அனுசரணைகள் மூலம் கோடிக்கணக்கான டொலர்களை சம்பாதித்த மரியா ஷரபோவா, இனிப்புப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலும் ஈடுபடுகிறார். இந்த இனிப்புப் பொருட்களுக்கு “சுகர்போவா” என வர்த்தக நாமம் (பிராண்ட் நேம்) சூட்டியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சுற்றுப்போட்டியின்போது ஷரபோவா என்ற பெயருக்குப் பதிலாக, மரியா சுகர்போவா என்ற பெயரில் தான் விளையாடினால் தனது இனிப்புப்பொருட்கள் வர்த்தகத்துக்கு பெரும் விளம்பரமாக அமையும் என ஷரபோவா கருதியுள்ளார்.

ஆனால் நிரந்தரமாக சுகர்போவா என பெயரை மாற்ற அவர் விரும்பவில்லை. அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகள் முடிந்தவுடன் மீண்டும் மரியா ஷரபோவா என தனது பெயரை மாற்றிக்கொள்ள அவர் திட்டமிட்டது மற்றொரு வேடிக்கையாகும். இவங்க உண்மையிலே ஷர-போவாவா இல்ல சுகர்-போவாவா..

சச்சின் டெண்டுல்கர் யார்?

டென்னிஸ் போட்டியை காண இந்த ஆண்டு விம்பிள்டன் சென்ற சச்சினை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என மரியா ஷரபோவா கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் கிரிக்கெட்டை விட்டு விடைபெறும் போது உலகமே கண்ணீர் விட்டது.

ஓய்வில் தனக்கு பிடித்த டென்னிஸ் போட்டியை பார்க்க சச்சின் செல்வார். இந்நிலையில் விம்பிள்டனின் நடைபெற்ற ஒரு போட்டியை சச்சின் வி.ஐ.பி. இருக்கையில் இருந்து நேரில் கண்டுகளித்தார்.

அப்போது அவருடன் இங்கிலாந்தின் பிரபல முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் மற்றும் கோல்ப் வீரர் இயான் பௌல்டர் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

வி.ஐ.பி. இருக்கையில் இருந்த வீரர்களை நினைவு கூர்கையில், பெக்காம் பெயரை கூறிய ஷரபோவா சச்சின் பெயரை விட்டுவிட்டார். அருகில் இருந்த ஒருவர் பெக்காம் அருகில் சச்சின் இருந்தார் அல்லவா? என கேட்டதற்கு சச்சின் யார்? அவரை எனக்கு தெரியாதே எனக் கூறினார்.

இதனையடுத்து `என்னது கடவுளை தெரியாதா’ என சச்சினின் ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து விட்டனர். மேலும்,`யார் அந்த ஷரபோவா’ என கிண்டல் கருத்துக்களையும் பதிவு செய்தனர்.

காதலுக்காக அடித்துக் கொண்ட ஷரபோவா- செரினா வில்லியம்ஸ்

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. தரவரிசையில் 3வது இடத்திலுள்ள இவர், பல்கேரியாவின் கிரிகெர் டிமிட்ரோவை காதலித்து வருகிறார். டிமிட்ரோவ் அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்சின் முன்னாள் காதலன். இது செரினாவை கோபத்தில் ஆழ்த்தியது போல

இதுகுறித்து கூறுகையில், எப்போது பேட்டி கொடுத்தாலும், நான் மகிழ்ச்சியாக உள்ளேன், நான் அதிர்ஷ்டசாலி என்று சொல்கிறார் ஷரபோவா. இதை கேட்டு கேட்டு போரடித்து விட்டது. கறுப்பு இதயம் கொண்டவர் தான் வேண்டும் என்றால், மரியா அவருடன் செல்லலாம் என்றார்.

இதனால் வெகுண்டு எழுந்த ஷரபோவா கூறுகையில், தனிப்பட்ட கருத்துக்கள் ஏதாவது பேச வேண்டும் என்றால், பாட்ரிக்குடனான உறவு குறித்து செரினா பேசலாம். தவிர, பாட்ரிக்கின் விவாகரத்தான திருமண வாழ்க்கை, அவரது குழந்தை குறித்து கூறலாமே என்றார் கடுப்பாக.

பின்னர் இவ்விடயத்தில் தனது தவறை உணர்ந்து முதலில் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் செரினா.

இதுகுறித்து செரினா வில்லியம்ஸ் கூறுகையில், மரியாவின் பெயரை நான் பயன்படுத்தி இருக்கக் கூடாது. எனது கருத்துக்கள் அவரை காயப்படுத்தி இருந்தால் இதற்காக, தனிப்பட்ட முறையில் முதல் நபராக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதை அவர் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன் என்றார். பின்ன கருத்து வேறுபாடு இருக்காதா..

மரியா ஷரபோவா கர்ப்பமா?

கடந்த 2012ம் ஆண்டு மரியா ஷரபோவா அமெரிக்க டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வந்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய ஷரபோவா கூறுகையில், எனக்கு ஒலிம்பிக் போட்டியின்போது வயிற்றில் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருந்தேன்.

பல டெஸ்ட்கள் எடுக்கப்பட்டன. எனக்கு கூட நாம் கர்ப்பமாக இருப்போமோ என்று பயம் வந்தது. ஆனால் மருத்துவர்கள் அதை இல்லை என்று கூறி விட்டனர். இது சாதாரண வயிற்று வலிதான் என்று கூறி ஆறுதல் அளித்தனர்.

மேலும் எனக்கும் எனது காதலரை திருமணம் செய்யப்போவதாக வெளியான செய்திகளும் கூட தவறானவை. இப்போதைக்கு அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை மரியாவே தெரியப்படுத்த குமுறிய அவரது கோடான கோடி ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். ரசிகர்களே..சந்தோசமா இருங்க..

SHARE