அறிமுக டெஸ்டில் 5 விக்கெட் கைப்பற்றி அசத்திய ஹாசில்வுட்

137
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர் ஹாசில்வுட் மிகவும் அபாரமாக  பந்துவீசி, 68 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.தனது அறிமுக டெஸ்டிலேயே அவர் 5 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார்.

தனது முதல் டெஸ்டிலேயே 5 விக்கெட் கைப்பற்றிய 143வது பந்துவீச்சாளராக ஹாசில்வுட் தனது பெயரை பதிவு செய்துள்ளார். அவர் புஜாரா, விராட் கோஹ்லி, ரஹானே, டோனி, அஸ்வின் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

23 வயதான ஹாசில்வுட் 6 ஒருநாள் போட்டியிலும், நான்கு 20 ஓவர் போட்டியிலும் விளையாடி இருக்கிறார்.

ஒருநாள் போட்டியில் 2010ம் ஆண்டு அறிமுகம் ஆன அவர் 4 ஆண்டுகள் கழித்தே டெஸ்டில் ஆட முடிந்தது.

SHARE