கொழுப்பை குறைக்கும் கீரை

113
கீரை வகைகளை நமது அன்றாட சமையலில் சேர்த்து கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது.தினமும் ஒரு கீரை வகையை சாப்பிடுவதன் மூலம் நோய்கள் ஏதும் அண்டாமல் இருக்கும், குறிப்பாக பசலைக் கீரை பல மருத்துவ குணங்களை கொண்டது என்றே கூறலாம்.

சுண்ணாம்பு மற்றும் நார்ச்சத்து அடங்கிய இந்த கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் உள்ளது.

இந்த கீரையின் முற்றிய தண்டுகளையும், இலைகள் நடுவில் தடித்துள்ள பாகங்களையும் கிள்ளி போட்டுவிட்டு சமைக்க வேண்டும்.

பசலைக்கீரையின் மகத்துவங்கள்

இந்த கீரை கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.

ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது.

குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை தடுக்க உதவுகிறது.

இலையை நன்றாக அரைத்து கொப்புளம், கட்டி, வீக்கம் ஆகியவற்றின் மீது பற்றிட்டால் அவை குணமாகும்.

இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி நீங்கும்.

மூட்டுகளில் வலி அல்லது காலில் வீக்கம் இருந்தால், அதனை சரிசெய்ய பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், அந்த வலியைக் குணப்படுத்தும்.

சரும நோய்களை தீர்க்கும். தினமும் ஒரு கப் பசலைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

இந்த பசலைக்கீரை புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.

SHARE