திருகோணமலையில் காணாமல் போனோர் அலுவலகம்: போராட்டத்தில் குதித்த மக்கள்

காணாமல் போனோர் அலுவலகத்தின் சந்திப்பு திருகோணமலை மாவட்டத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வாக்கு மூலங்களுக்கு இன்னும் சிறந்த தீர்வு கிடைக்காத பட்சத்தில் இன்றைய தினம் இடம்பெறும் வாக்குமூலம் போலியானது எனவும் இதனை தாங்கள் எதிர்ப்பதாகவும் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உறவுகளில் சிலர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் காணாமல் போனோர் தொடர்பான அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்கான கூட்டம் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற நிலையில் திருகோணமலை – கண்டி பிரதான வீதியிலுள்ள இந்து கலாச்சார மண்டபத்திற்கு முன்னால் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னாலும் காணாமல் போனோர் அலுவலக வாக்குகளை பெற்றுக்கொள்ளும் இடத்தை சூழவுள்ள பிரதேசத்திலும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.

யுத்த காலங்களில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணாமல்போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் காணாமல் போனோர் அலுவலகமானது தனது ஆரம்ப சந்திப்புக்களை கடந்த மே மாதம் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News