ஹாதர் மஸ்தானுக்கு இந்து சமய அமைச்சு பதவி வழங்கியதும் அதன் சூழ்ச்சியும்!- பதவி விலகுவாரா? மானஸ்தன் எம்.பி மஸ்த்தான்

சிங்களப் பேரினவாதிகளின் மேலாதிக்க அரசியல் கடந்த முப்பது வருடகாலங்களாக இந் நாட்டில் இடம்பெற்று வருவது நம் அறிந்த விடையமே. அதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்ற பொழுது 1990 காலப்பகுதிகளில் யாழ் குடா நாட்டிலிருந்த முஸ்லீம்கள் தமிழீழ விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டனர் என்பது உண்மை. ஏன் வெளியேற்றப்பட்டார்கள் எதற்காக வெளியேற்றப்பட்டார்கள் என்பதன் விளக்கம் தினப்புயல் பத்திரிகையிலும், இணையத்தளத்திலும் சுட்டிக்காட்டியுள்ளோம்.

தமிழினத்தின் போராட்டத்தை அழிப்பதற்காக சிங்கள இனவாத அரசு டட்லி சேனநாயக்கா தொடக்கம் மைத்திரி பால சிறிசேன வரை அதிக பட்ஷ இனவாதத்தை விதைத்து முஸ்லீம்களையும் தமிழினத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட வழிகளை உருவாக்கியுள்ளனர். இதன் பொழுது சிங்களவர்கள் நல்லவர்கள் என்று முஸ்லீம் அரசியல் வாதிகளும் முஸ்லீம் மக்களும் முழுமையான நம்பிக்கையை வைத்திருந்தனர். தமிழ் பேசும் மக்கள் என்று நிலைப்பாட்டிலிருந்து முஸ்லீம்கள் தங்களை தங்களுடைய ஆண்மீக ரீதியாக வேறுபடுத்தும் செயற்றிட்டத்தையே யுத்தத்திற்குப் பின்னரான அரசியலில் கொண்டிருந்தனர். அதுவே இவர்களுக்கு ஆபத்தான ஒரு நிலைப்பாட்டை இன்று வரை தோற்றுவித்துள்ளது. தேசியம் சுயநிர்ணய உரிமைக்காய் ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் முஸ்லீம் அரசியல் தலைவர்களுடன் 2004ம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளின் பொழுது தமிழ் பேசும் மக்கள் என்ற வரையறையிலேயே முஸ்லீம் மக்கள் பார்க்கப்படுகின்றனர்.

ஆகவே தம்மோடு இணைந்து பயணிக்குமாறு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் அவர்களுக்கு பனித்திருந்தார். அவரோ ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளைப் புறக்கனித்து தமிழ் பேசும் மக்கள் என்ற சொற் பதத்திற்குள் தம்மை அடக்கி விட முடியாது எனக் கருதி ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளிலிருந்தும் வெளியேறினார். இதனால் காங்கிரசுக்குள் இடையே பாரிய பிரச்சனைகள் அக்காலகட்டத்திலே நிலவியது. முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளைச் சீர் குழைத்து தமக்கான ஒரு தனி அலகு தேவை எனக்கருதி முஸ்லீம்கள் தமக்குள்ளே பல்வேறு கட்சிகளை இந் நாட்டில் உருவாக்கி தொடர்ந்தும் குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருந்தனர். தமிழினத்தை ஓரம் கட்ட நினைத்த இலங்கை அரசு ஆயுத ரீதியில் வெற்றி பெற்றாலும். அகிம்சை ரீதியான போராட்டத்தில் வெற்றி பெற முடியாமல் போனது. நாற்பத்தைந்து நாடுகளின் உதவியுடன் தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி ஆயுதப் போராட்டத்தை இலங்கை அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது.

தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வரை தமது அரசியல்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றது. ஆகவே தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளை பலப்படுத்தும் மாறு தமிழ் பேசும் மக்களிடம் நாம் கூறிவருகின்றோம். அதனை அவர்கள் செவ்வனவே செய்து வருகின்றார்கள். இருந்தும் தமிழ் மக்களிடையே இருக்கக் கூடிய ஒரு சில கட்சிகள் அரசாங்கத்திடம் பணத்தினைப் பெற்றுக் கொண்டு அவர்களின் கைக்கூலிகளாகச் செயற்படுவது மனவருத்தத்திற்குரிய விடையம். இருக்கக் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அதன் தலைமைகள் பிழை விடுகின்ற பொழுது அதனைச் சுட்டிக்காட்டி அதனைச் சீர் செய்வதே சிறந்ததொன்று ஆகும்.

இதனுடைய அடிப்படை இவ்வாறு இருக்க மதவாதம் இனவாதம் எங்கு துண்டப்படுகின்றதோ அங்கே பாரிய பிரச்சனைகள் உருவாகுவதற்கு காரணங்களாக அமையும். முஸ்லீம் மக்களைப் பொறுத்தவரையில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருகின்றதோ அந்த அரசாங்கத்தைக் காக்கா பிடித்துப் போவதே வாழையடி வாழையாக தொடர்ந்து வந்த கதை. அதனையே அவர்கள் இன்றும் செய்து வருகின்றார்கள். இவர்களை எக்காலத்திலும் திருத்த முடியாது ஆனால் சிங்கள அரசாங்கம் அதனுடைய அரசியல் தலைவர்கள் தற்பொழுது தமிழினத்தையும் முஸ்லீம்களையும் இனரீதியாகவும், மதரீதியாகவும் தூண்டிவிட்டு அதில் வேடிக்கை பார்ப்பதற்காக தற்பொழுது இந்து சமய விவகார அமைச்சுப் பதவியை முஸ்லீம் இனத்தைச் சார்ந்த வன்னிப் பாராளுமன்ற ஹாதர் மஸ்தான் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனுடைய பின்னணியில் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் மிகச் சாதூரியமாக செயற்படுத்திவருகின்றார்.

மதவாதத்தைத் தூண்டுவதன் ஊடாக முஸ்லீம் தமிழ் மக்களிடையே பிரிவினைகளை எதிர்பார்க்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஒரு சதித்திட்டமாகவே இந்த அமைச்சுப் பதவி அமையப்பெறுகிறது. மஸ்தானைப் பொறுத்தவரையில் ஒரு மனஸ்தன் என்பது உண்மை. அவர் ஒரு முஸ்லீமாக இருந்தும் நூற்றுக்கணக்கான இந்துக் கோவில்களை புனரமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் உதவிகள் பல புரிந்திருக்கின்றார். இவர் ஒரு தொழிலதிபரும் கூட தமிழ் மக்கள் இவர்களுடைய கம்பனிகளில் அதிகமாகப் பணிபுரிகின்றனர். பதவிகளுக்கும் பணத்திற்கும் மஸ்தான் ஆசைப்பட்டவரும் இல்லை. ஊடகத்தைப் பொறுத்தவரையில் இவருக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. வவுனியாவில் இருக்கக் கூடிய ஊடகவியலாளர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை வழங்கியிருக்கின்றார்.

முஸ்லீம் இனத்தவராக இருந்தாலும் அரசியலில் தமிழ் மக்களிடையே கூடுதல் அக்கறை கொண்டவராக இவருடைய செயல் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது. பாராளுமன்றத்திற்கு தெரிவாகுவதற்கு முன்னமே இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக மாதம் ஐயாயிரம் ரூபா வழங்கி வருகின்றார். இது இவருடைய சிறப்பியல்பு. இவர்களுடைய பரம்பரைத் தொழில் மாட்டு வியாபாரம் . இதன் ஊடாகவே இவர்கள் வவுனியாவில் மிகப்பெரிய தொழில் அதிபராக மாறியிருக்கின்றார்கள்.

இங்கு பிரச்சனை என்னவென்றால் இந்துக்கல் கோமாதாவை தெய்வமாக வழிபடுகின்றார்கள். இந்தக் கோமாதவையே இவர்கள் கொலை செய்து கடந்த நாற்பது வருடங்களாக சந்தைப்படுத்தி வருகின்றார்கள்.

இவரை எப்படி நாம் ஒரு இந்து சமயத்தின் அமைச்சராக எமது பிரதேசத்தில் கடமையாற்றுவதற்கு அனுமதிப்பது. நாம் மேற்குறிப்பிடப்பட்ட காரணங்களை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மஸ்த்தான் அவர்கள் சிந்திப்பாராக இருந்தால் இந்த அமைச்சுப் பதவியிலிருந்து தாமாகவே ராஜினாமா கடிதத்தைக் கையளிப்பார். இல்லையேல் தாம் தொடர்ந்தும் இந்த அமைச்சுப் பதவியில் இருப்பேன் என்று அடம்பிடிப்பாராக இருந்தால். மீண்டும் ஒரு இனவாதத்தையும் மதவாதத்தையும் சிங்கள அரசுடன் இணைந்து செயற்படுத்தப்போகின்றார் என்பது அவருடைய செயற்பாட்டிலிருந்து விளங்கப்போகின்றது. மஸ்த்தானை திட்டமிட்ட முறையில் ரணில் அனுகியது எப்படி. இதனுடைய பின்னணியில் மாட்டிக்கொண்ட தமிழ் அரசியல்

  வவுனியா டெலோ காரியாலயத்தில் இப்தார் நிகழ்வு! லங்கை, தலைப்புச் செய்திகள், வவுனியா வவுனியா வைரவர்புளியங்குளத்தில் உள்ள  தமிழீழ விடுதலை இயக்கத்தின்(டெலோ) காரயாலயத்தில் விமர்சையாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு இன்று(12.06.2018) மாலை 6 மணியளவில் வவுனியா வைரவர்புளியங்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலயத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் பணிப்பின் பேரில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதராலிங்கம் அவர்களின் தலைமையில் இப்தார் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடை பெற்றன

வவுனியாவில் தமிழ்,முஸ்லிம் இரண்டு சமூகத்தினருக்குமிடையில் உணர்வுப்பூர்வமான ஒற்றுமையை நிலை நாட்டவும் சகோதரத்துவமாக இரண்டு சமூகத்தினரும் செயற்பட வேண்டும் என்ற நோக்குடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மெளலவி அவர்களின் ஆசீர்வாத உரையுடன் ஆரம்பித்து நோன்பு துறக்கும் நிகழ்வு இடம்பெற்றது மேலும் இந்நிகழ்வில் முன்னால் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன்,வடமாகாண சுகாதார அமைச்சின் இணைப்பாளர் ராஜன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் புருஸ், வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரதீபன், வவுனியா இளைஞர் சம்மேளனத்தை சேர்ந்த அமுதராஜ் உட்பட இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பிரபல வர்த்தகர்கள் ,பள்ளிவாசல் நிர்வாகத்தினர், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் அப்படியாக இருந்தால் ஏன் மஸ்தானுக்கு அமைச்சுப்பதவி வழங்கக்கூடாது என்ற கேள்வியம் எழுப்பப்பட்டுள்ளது அதே நேரம்

 

தொடரும்…

About Thinappuyal News