வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கன மழை காரணமாக மியான்மர் எல்லையில் அமைந்துள்ள காக்ஸ் பஜார், ரங்கமாதி ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மழையின் காரணமாக இஸ்லாம்பூர், புரிகாட், அம்டோலி, ஹத்திமாரா, போரோகுல்பாரா, சாரைபாரா பகுதிகளிலும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

கன மழை காரணமாக மியான்மரில் இருந்து அகதிகளாக வந்துள்ள ஆயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் கோக்ஸ் பஜார் பகுதியில் மண் சுவரொன்று இடிந்து விழுந்ததில் பெண்னொருவரும், அவரது 2½ வயதான ஆண் குழந்தையும் சிக்கிக்கொண்டனர். இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததோடு. குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு குறித்த மண்சரிவு மற்றும் மழையில் சிக்கி மொத்தம் 14 பேர் பலியாகி உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளதோடு பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்படடுள்ளது..