வித்தியாசமான தோற்றத்தில், ஜீவா

ஜீவா நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஜிப்ஸி’ என்று பெயரிட்டுள்ளனர். குக்கூ, ஜோக்கர் படங்களை எடுத்த ராஜுமுருகன் டைரக்டு செய்கிறார். இதில் கதாநாயகியாக இமாச்சல பிரதேச அழகி பட்டம் வென்ற நடாசா சிங் நடிக்கிறார். இந்த படத்துக்கான முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். ஜீவா நீளமான முடி வளர்த்துள்ளார். கிட்டார் இசைக்கருவியும் வைத்துள்ளார்.

ஒரு குதிரை அவர் அருகில் நிற்கிறது. இந்த குதிரை படம் முழுக்க அவருடன் பயணிக்கிறது என்கின்றனர். ஊர் ஊராக சுற்றித்திரியும் வாலிபரை போன்று அவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் தனக்கு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று அவர் நம்புகிறார்.

படம் குறித்து இயக்குனர் ராஜு முருகன் கூறும்போது, “நான் இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். அப்போது காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் நாடோடிகளாக திரியும் மக்களை பார்த்தேன். அவர்களிடம் இருந்து சில விஷயங்களை எடுத்துக்கொண்டு இந்த படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறேன். சில சமூக பிரச்சினைகளும் படத்தில் இருக்கும்” என்றார்.

About Thinappuyal News