குழந்தைகளை கொல்ல சொன்னாரா கடவுள் – ப்ரியங்கா சோப்ரா

92

சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் தாக்குதல் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். அந்த கொடூர தாக்குதலில் பள்ளிக் குழந்தைகள் சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பல பேர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த தாக்குதல் பற்றி கேள்விபட்டதும் அழுது விட்டதாக ப்ரியங்கா சோப்ரா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் எதர்ச்சியாக இந்த தாக்குதலை பற்றி அறிந்தேன். இப்படி சம்பவத்தை டிவியில் பார்த்ததும் கண்கலங்கிவிட்டேன். என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

மதங்கள் எப்படியெல்லாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடவுள் இல்லை, அவர் குழந்தைகளை கொல்ல ஓ.கே சொன்னாரா…? என்று ஆவேசம் அடைந்துள்ளார்.

SHARE