இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள்

இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக செயல்படும்.

தினமும் கொழுப்புகள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது உடல் பருமனடைவதுடன் இதய நோயும் நம்மை தொற்றிக் கொள்கிறது.

எனவே இதய ஆரோக்கியத்துக்கு தேவையான உணவுகளை அன்றாடம் சாப்பிடுவது அவசியம்.

ஓமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ள சால்மன் மீன், ரத்தம் உறைவதை தடுக்கிறது, அத்துடன் இதய நோய்க்கு காரணமான ட்ரைக்ளிசரைடுகளின் அளவை குறைக்கிறது.

தினமும் ஒரு கையளவு வாட்நட்ஸை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும், பாதாம், முந்திரி, பிஸ்தா, ஆளி விதைகள் மற்றும் சியா விதைகளை சாப்பிடலாம்.

பாலிஃபீனால்கள் அதிகம் கொண்ட ராஸ்ப்பெர்ரியில், நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி அதிகம் உள்ளது, இதனால் பக்கவாதம் வருவது தடுக்கப்படுகிறது.

கொண்டைக்கடலை மற்றும் இதர பருப்பு வகைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துகள் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கின்றன, குறிப்பாக சோடியம் குறைவாக அல்லது உப்பு சேர்க்காததை வாங்கி பயன்படுத்துவது நலம்.

இரத்த அழுத்தம் மற்றும் இரத்தம் உறைவதை தடுக்கும் ப்ளேலோனால்கள் டார்க் சொக்லேட்டில் உள்ளன, இது ஆன்டி ஆக்ஸிடன்ட் போன்று செயல்பட்டு தமனிச் சுவர்களில் கெட்ட கொழுப்பு தேங்காமல் தடுக்கிறது.

அவகேடா பழத்தில் நிறைந்துள்ள நல்ல கொழுப்புகள், உடலின் கெட்ட கொழுப்புகள் அளவை குறைக்கிறது, எனவே எடையை குறைக்க நினைப்போர் அளவாக சாப்பிட வேண்டும்.

இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் தக்காளியும் பங்கு வகிக்கிறது, இதிலுள்ள லைக்கோபைன், விட்டமின் சி மற்றும் ஆல்பா பீட்டா கரோட்டீன்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன.